மாணவியை வீடு புகுந்து கட்டிப்போட்டு 4 மாணவர்கள் பாலியல் பலாத்காரம்..

சென்னை காசிமேட்டில் 8-ம் வகுப்பு மாணவியை வீடு புகுந்து கட்டிப்போட்டு 4 மாணவர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காசிமேடு பகுதியை சேர்ந்த தம்பதிக்கு 3 மகள்கள் உள்ளனர். இவர்களில் மூத்த மகளுக்கு 15 வயதும், 2வது மகளுக்கு 13 வயதும், 3-வது மகளுக்கு 11 வயதும் ஆகிறது. இவர்களின் தாய் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.

2-வது மகளான 13 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். அவருடன் படிக்கும் 8-ம் வகுப்பு மாணவர்கள் 4 பேர் மாணவியின் வீட்டுக்கு சென்று படிப்பதை வழக்க மாக வைத்திருந்தனர்.

இந்த நிலையில் 4 மாணவர்களும் மாணவியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீடு புகுந்தனர். பின்னர் கதவை பூட்டிக்கொண்டு மாணவியை கட்டிப்போட்டனர். பின்னர் 4 பேரும் சேர்ந்து மாணவியின் ஆடைகளை கழற்றி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி கூச்சல் போட்டார். இதையடுத்து 4 மாணவர்களும் இதுபற்றி யாரிடமாவது சொன்னால் கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டல் விடுத்துள்ளனர். பின்னர் 4 பேரும் வீட்டில் இருந்து வெளியேறினார்கள்.

தனக்கு நேர்ந்த இந்த பாலியல் கொடுமையால் அதிர்ந்துபோன மாணவி இது பற்றி முதலில் தனது தங்கையிடம் தெரிவித்துள்ளார். பின்னர் இந்த விஷயம் தாய்க்கு தெரிய வந்துள்ளது.

இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த தாய் இதுபற்றி பள்ளி தலைமை ஆசிரியரிடம் முறையிட்டார். அவர் போலீசில் புகார் அளிக்க அறிவுறுத்தினார். இது தொடர்பாக மாணவியின் தாய் ராயபுரம் மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

பின்னர் 4 மாணவர்களும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் காசிமேடு பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

images 4 1 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories