சாலையில் சென்ற கார் மீது மரம் விழுந்ததில் காரில் பயணித்துக்கொண்டிருந்த வங்கி மேலாளர் பலி..

சென்னையில் காரில் சென்றுகொண்டிருந்தபோது சாலையிலிருந்த மரம் விழுந்ததில் காரில் பயணித்துக்கொண்டிருந்த வங்கி மேலாளர் உயிரிழந்த சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

742839 cni22june2513 - 2026

கடந்த சில தினங்களாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்துவருகிறது. மேலும், சென்னை மாநகரின் பல இடங்களிலும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது. சென்னை போரூர் பகுதியைச் சேர்ந்தவர் வாணி கபிலன் (57). இவர் கே.கே.நகரிலுள்ள ஒரு வங்கியில் மேலாளராகப் பணியாற்றிவந்தார். இவர், வெள்ளிக்கிழமை மாலை வங்கிப் பணியை முடித்துவிட்டு தன் சகோதரி எழிலரசியுடன் காரில் வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தார்.

இவர்கள் காரை கார்த்திக் என்பவர் ஓட்டியிருக்கிறார். அந்த கார் கே.கே.நகர் லட்சுமண சாலையிலிருந்து, பி.டி.ராஜன் சாலை வழியாகச் சென்றுகொண்டிருந்தது. அப்போது கர்நாடக வங்கியருகில் கார் வந்தபோது, சாலையில் நின்றுகொண்டிருந்த மரம் வேரோடு சாய்ந்து காரின் பின்பக்கம் மீது விழுந்தது. இதில், பின்னிருக்கையில் அமர்ந்திருந்த வாணி உடல் நசுங்கி உயிரிழந்தார். எழிலரசி, கார்த்திக் இருவரும் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினர்.

விபத்திலிருந்து மீட்கப்பட்ட இருவருக்கும் கே.கே.நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சம்பவமறிந்து வந்த தீயணைப்புப்படையினர் சாலையில் சாய்ந்துகிடந்த மரத்தை அப்புறப்படுத்தினர். உயிரிழந்த வங்கி மேலாளரின் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.

விபத்து நடந்த சாலையில் மழைநீர் வடிகாலுக்கான பள்ளம் தோண்டப்பட்டிருந்தது. அதனால், அந்தச் சாலையிலிருந்த மரம் பிடிமானம் இல்லாமல் சாய்த்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. மாநகராட்சி அதிகாரிகளின் அஜாக்கிரதை, அலட்சியம் காரணமாகவே இந்த விபத்து நடந்திருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

எனினும் இந்த விபத்துக்கு, மழைநீர் வடிகால் பணிகள் காரணமில்லை என்று சென்னை மாநகராட்சி விளக்கமளித்திருக்கிறது. “விபத்து நேரிட்ட இடத்துக்கு 10 அடிக்கு முன்னதாகவே பள்ளம் தோண்டும் பணி நிறுத்தப்பட்டுவிட்டது. இரண்டு நாள்களாகப் பெய்த மழையாலும், மண்ணின் ஈரத்தன்மை காரணமாகவும் பழைமையான அந்த மரம் சாய்ந்திருக்கிறது. அங்கு இரண்டு நாள்களாக மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை” என்று மாநகராட்சி தெரிவித்திருக்கிறது. எனினும் பள்ளம் தோண்டிய ஊழியர்களிடமும் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories