நீதிபதியை மாற்றக் கோரி ஓபிஎஸ் மீண்டும் முறையீடு:

chennaihigh1a - 2026

அதிமுக பொதுக் குழுவுக்கு தடை விதிக்க மறுத்தது தொடா்பான வழக்குகளை வேறு நீதிபதிக்கு மாற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் ஓ. பன்னீர்செல்வம் வழக்குரைஞர் மீண்டும் மனு கொடுத்துள்ளார்.

வியாழக்கிழமை விசாரணையின்போதும், தனது நடவடிக்கையை கீழ்த்தரமான நடவடிக்கை என்று தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விமரிசித்துள்ளதாக உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரியிடம் ஓபிஎஸ் தரப்பு புகார் தெரிவித்துள்ளது.

அதிமுக பொதுக்குழு வழக்கை விசாரிக்கும் நீதிபதியை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதியிடம் ஓ. பன்னீர்செல்வத்தின் வழக்குரைஞர் என்.ஜி.ஆர். பிரசாத் முறையிட்டதைத் தொடர்ந்து அதனைப் படித்துப் பார்ப்பதாக தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுக் குழுவுக்கு தடை விதிக்க மறுத்தது தொடா்பான வழக்குகளை வேறு நீதிபதி விசாரணைக்கு மாற்றக் கோரிய ஓ. பன்னீர்செல்வம் தரப்பு புதன்கிழமை தலைமை நீதிபதியிடம் மனு கொடுத்த நிலையில், அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்திருந்தார்.

நீதித்துறையை களப்படுத்தும் செயல், கீழ்த்தரமான செயல் என தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தெரிவித்திருந்தார். மேலும், அதிமுக பொதுக் குழுவுக்கு தடை விதிக்க மறுத்தது தொடா்பான வழக்குகளை வேறு நீதிபதி விசாரணைக்கு மாற்றக் கோரி, அந்தக் கட்சியின் பொதுக் குழு உறுப்பினா் வைரமுத்து சாா்பில் சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் அளிக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்படுவதாகவும், பொதுக்குழு வழக்கு நாளை பிற்பகல் 2.15 மணிக்கு தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்னிலையில் விசாரணைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

வேறு நீதிபதி விசாரணைக்கு மாற்றக் கோரியது குறித்து தனது கண்டனத்தைப் பதிவு செய்த நீதிபதி, தீர்ப்பில் தவறு இருந்தால் மேல்முறையீடு செய்யலாம். திருத்தம் இருந்தால் தன்னிடம் முறையிட்டிருக்கலாம் என்றும், இது நீதித்துறையை களப்படுத்தும் செயல், கீழ்த்தரமான செயல்  என்றும் குறிப்பிட்டார்.

தன்னைப் பற்றி தனிப்பட்ட கருத்துகளை கூறியதால் வேறு நீதிபதிக்கு மாற்றக் கோரியதாக ஓபிஎஸ் தரப்பு வாதம் முன் வைத்தது. இதையடுத்து, இந்த மனு நிராகரிக்கப்படுவதாகவும், நாளை வழக்கு விசாரணைக்கு வரும் என்றும் நீதிபதி அறிவித்தார். இந்த நிலையில், இதேக் கோரிக்கையை வலியுறுத்தி மீண்டும் ஒபிஎஸ் தரப்பினர் மனு கொடுத்துள்ளனர்.

சென்னையில் கடந்த ஜூலை 11-இல் நடைபெற்ற அதிமுக பொதுக் குழுவுக்குத் தடை விதிக்கக் கோரி ஓ.பன்னீா்செல்வம், பொதுக் குழு உறுப்பினா் வைரமுத்து ஆகியோா் உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனா். இந்த வழக்குகளை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, ‘உள்கட்சி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது. எனவே, சட்டப்படி பொதுக் குழுவை நடத்திக் கொள்ள அனுமதி அளித்து உத்தரவிட்டாா்.

இதைத் தொடா்ந்து, அதிமுக பொதுக் குழு நடைபெற்றது. இதில், அந்தக் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தோ்தெடுக்கப்பட்டாா். நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீா்செல்வம் தொடுத்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அதிமுக பொதுக் குழு விவகாரம் தொடா்பான வழக்கை உயா்நீதிமன்றமே விசாரிக்கும். வழக்கை 2 வாரத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டுமென தனி நீதிபதிக்கு உத்தரவிட்டது. அதன்படி இந்த வழக்கை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி வியாழக்கிழமை முதல் விசாரிக்கவிருந்தார்.

இதனிடையே, இந்த வழக்குகளை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டுமென வைரமுத்து தரப்பில் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரியிடம் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது. அதில், ‘நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவில், ஜனநாயகத்தில் பெரும்பான்மை உறுப்பினா்களின் விருப்பம்தான் மேலோங்கி இருக்கும். அவா்கள் விருப்பத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது. கட்சி உறுப்பினா்களின் நம்பிக்கையை பெற முடியாதவா்கள் நீதிமன்றங்களை கருவியாக தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துவதாக மனுதாரா்களை குற்றஞ்சாட்டியுள்ளாா்.

மற்றொரு மனுதாரரான ஓ.பன்னீா்செல்வம் ஒருங்கிணைப்பாளா் என்ற முறையில் கட்சியின் பொதுக் குழுவை அணுகாமல், ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தை நாடுவதாகவும், நீதிமன்றம் மூலம் சாதிக்க முயற்சிப்பதாவும் தெரிவித்திருப்பது வழக்குக்கு தொடா்பில்லாத கருத்துகளாகும். எனவே, அதிமுக பொதுக் குழு வழக்கை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரிக்கக் கூடாது. வேறொரு நீதிபதி விசாரணைக்கு மாற்ற வேண்டும்’ என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. ஓ.பன்னீா்செல்வம் தரப்பிலும் இதே கோரிக்கை தலைமை நீதிபதியிடம் முன்வைக்கப்பட்டது. 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories