images 2022 09 27T091804.811 - 2026

அதிமுக அலுவலகத்தில் காணாமல் போன ஆவணங்கள் மீட்பு- சிபிசிஐடி..

சென்னை
images 2022 09 27T091804.811 - 2026

அதிமுக அலுவலகத்திலிருந்து காணாமல் போனதாக கூறப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் ஓபிஎஸ் ஆதரவாளர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இரட்டை தலைமையின்கீழ் இயங்கிய அதிமுகவை ஒற்றை தலைமையின்கீழ் கொண்டு வருவதற்காக கடந்த ஜூலை11-ம் தேதி அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் நடைபெற்றது. அதே நேரத்தில் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைஅலுவலகத்துக்குள் செல்ல ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள்முற்பட்டனர். அவர்கள் அதிமுக அலுவலகத்தின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர் அப்போது ஓ.பன்னீர்செல்வம், கே.பழனிசாமி ஆதரவாளர்கள் இடையே கடும்மோதல் ஏற்பட்டு கலவரமானது. இதில், 47பேர் காயமடைந்தனர். வாகனங்கள்சேதப்படுத்தப்பட்டன. அதிமுக அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள் திருடுபோயின.

images 2022 09 27T091729.471 - 2026

அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற மோதல், ஆவணங்கள் எடுத்துச் செல்லப்பட்டது உள்பட 4 வழக்குகளை தனித்தனியாக ராயப்பேட்டை போலீஸார் பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்குகளின் விசாரணை அனைத்தும் சிபிசிஐடி பிரிவுக்குமாற்றப்பட்டது. சிபிசிஐடி போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தினர். இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பாக பழனிசாமியின் ஆதரவாளர்கள்40 பேரும், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் 27 பேரும் நீதிமன்றத்தில் நிபந்தனைஜாமீன் பெற்றனர். இதற்கிடையே அதிமுகஅலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள் திருடப்பட்டதாக பழனிசாமி ஆதரவாளர் சி.வி.சண்முகம் எம்பி கொடுத்த புகாரின்பேரில் தொடர் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், அதிமுக அலுவலகத்தில்நடைபெற்ற மோதலின்போது காணாமல் போனதாக கூறப்பட்ட 113 ஆவணங்களும் மீட்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர் மீட்கப்பட்டஅனைத்து ஆவணங்களும் நீதிமன்றத்தில்தாக்கல் செய்யட்டுள்ளதாகவும், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் ஒருவரிடமிருந்துஇந்த ஆவணங்கள் அனைத்தும் மீட்கப்பட்டுள்ளதாகவும் சிபிசிஐடி போலீஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.