திருவள்ளூர் ராகவேந்திரர் கோயிலில் சிலை, நகை, பணம் கொள்ளை!

திருவள்ளூர் ராகவேந்திரர் கோயிலில் பஞ்சலோக சிலை, நகை, பணம் கொள்ளை போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூரில் பழமையான ராகவேந்திரர் கோயிலின் பூட்டை உடைத்து பஞ்சலோக சிலைகள், வெள்ளி, நகை, ரொக்கம் ஆகியவைகளுடன் கண்காணிப்பு கேமரா பதிவு செய்து வைக்கும் கருவியையும் திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

திருவள்ளூர் நகரின் மையப் பகுதியான வீரராகவர் கோயில் குளம் அருகே தெற்கு குளக்கரை தெருவில் அமைந்துள்ளது ராகவேந்திரர் கோயில் உள்ளது. இந்த பழமையான கோயில் கடந்த 2001-இல் புதுப்பிக்கப்பட்டது. இதையடுத்து இந்தக் கோயிலுக்கு நாள்தோறும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் வியாழக்கிழமை ராகவேந்திரருக்கு சிறப்பு தீபாராதனை மற்றும் பூஜையும் நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். அதைத் தொடர்ந்து இரவில் வழக்கம்போல் அர்ச்சகர் ராகவேந்திரன் ,கோயிலை பூட்டிவிட்டுச் சென்றுள்ளார்.இந்த நிலையில் அர்ச்சகர் ராகவேந்திரன் வெள்ளிக்கிழமை காலையில் கோயிலுக்கு வந்தபோது கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்ததோடு பொருள்கள் சிதறிக் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதைத் தொடர்ந்து உள்ளே சென்று பார்க்கையில் வெள்ளிக் கவசம், வெள்ளி கோமுக தட்டு, கலச சொம்பு, பஞ்சபாத்திரம், வெள்ளி ஆரத்தி தட்டு, வெள்ளி நாணயம், அகல், தீபம், உள்பட 18 கிலோ வெள்ளிப் பொருள்கள், 5 கிலோ எடை கொண்ட பஞ்சலோக சிலை, 63 கிராம் நகை மற்றும் ரொக்கம் ரூ.30 ஆயிரம் ஆகியவைகளை யாரோ மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. மேலும், கோயிலில் வைத்திருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை பதிவு செய்த கருவியையும் உடைத்து எடுத்துச் சென்றனர்.

WhatsApp Image 2022 10 21 at 11.30 .51 AM .jpeg - 2026

இது தொடர்பாக கோயில் அர்ச்சகர் ராகவேந்திரன், திருவள்ளூர் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இந்த நிலையில் ஊருக்கு மையப்பகுதியில் உள்ள கோயிலில் வெள்ளி, நகை, சிலை மற்றும் ரொக்கம் ஆகியவைகளை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories