images 71 - 2026

இன்றும் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.328 உயர்வு..

சென்னை
images 71 - 2026

இன்றும் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.328 உயர்ந்துள்ளதால் தங்கம் வாங்க மக்கள் தயக்கம் காட்டுகின்றனர்.

தங்கம் விலை கடந்த சில மாதமாக ஏற்றம், இறக்கமாக காணப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த மாதம் கடைசி ஒரு வாரத்தில் தங்கம் விலை உயர தொடங்கியது. கடந்த 23ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.40,528க்கு விற்கப்பட்டது. 24ம் தேதி தங்கம் பவுன் ரூ.40,608க்கும்(25ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை), 26ம் தேதி ரூ.40,688க்கும், 27ம் தேதி ரூ.40,688க்கும், 28ம் தேதி ரூ.40,840 என தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. தொடர்ச்சியாக 4 நாட்களில் தங்கம் பவுனுக்கு ரூ.312 வரை அதிகரித்தது.

புத்தாண்டு நேரத்தில் தங்கம் விலை உயர்ந்து வந்தது விஷேச தினத்தில் நகை வாங்க காத்திருந்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் 29ம் தேதி தங்கம் விலை பெயரளவுக்கு குறைந்தது. அன்றைய தினம் கிராம் ரூ.5,095க்கும், பவுன் ரூ.40,760க்கும் விற்கப்பட்டது. இந்த விலை குறைவு ஒரு நாள் கூட நீடித்தப்பாடில்லை. மறுநாளே, அதாவது 30ம் தேதி தங்கம் விலை மீண்டும் அதிகரித்தது. அன்றைய தினம் கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,115க்கும், பவுனுக்கு ரூ.160 அதிகரித்து ஒரு பவுன் ரூ.40,920க்கும் விற்கப்பட்டது. 31ம் தேதியும் தங்கம் விலை அதிகரித்தது.

அன்றைய தினம் கிராமுக்கு ரூ.15 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,130க்கும், பவுனுக்கு ரூ.120 அதிகரித்து ஒரு பவுன் ரூ.41,040க்கும் விற்கப்பட்டது. அதே நேரத்தில் தங்கம் விலை மீண்டும் பவுன் 41 ஆயிரத்தை தாண்டியது. அதாவது 28 மாதங்களுக்கு பிறகு தங்கம் விலை ரூ.41 ஆயிரத்தை தாண்டியது. 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.41 ஆயிரத்தை தாண்டியது குறிப்பிடத்தக்கது. நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் சனிக்கிழமை விலையிலேயே தங்கம் விற்பனையானது. ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு தங்கம் மார்க்கெட் நேற்று தொடங்கியது.

அதில் தங்கம் விலை உயர்ந்து காணப்பட்டது. அதாவது தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5150க்கும், பவுனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு பவுன் ரூ.41,200க்கும் விற்க்கப்பட்டது. இந்நிலையில் இன்றும் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.328 உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.5,191க்கும் சவரன் ரூ.41,528க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.1 அதிகரித்து ரூ.75.50க்கு விற்பனை ஆகிறது. தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.