தூங்காத கண்களை தாலாட்டி துயில வைத்த வாணிஜெயராம் மறைவு..

images 73 - 2026

தூக்கம் வராமல் தவித்த இதயங்களை தன் இன்னிசை குரலால் தாலாட்டி  தூங்கவைத்தவர் பின்னணி பாடகி வாணி ஜெயராம் அவர் இன்று காலமான செய்தி கேட்டு உலகமுழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் வாணிஜெயராம் ஆத்மா சாந்தி அடைய அஞ்சலி செலுத்தி வருகின்றனர்

பிரபல பின்னணிப் பாடகி வாணி ஜெயராம்(78) சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள அவரின் இல்லத்தில் இன்று சனிக்கிழமை பிற்பகல்  காலமானார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் நெற்றியில் காயங்களுடன் வாணி ஜெயராம் இறந்து கிடந்தார். படுக்கை அறையில், கீழே விழுந்து நெற்றியில் அடிபட்டு உயிரிழந்ததாக போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 1945-ம் ஆண்டில் வேலூரில் பிறந்த வாணி ஜெயராம்-ன் இயற்பெயர் கலைவாணி. வங்கி ஊழியராக பணியாற்றிய வாணி ஜெயராம், வேலை மாற்றம் காரணமாக மும்பை சென்றபோது, அவரின் திறமையை அடையாளம் கண்டது இந்தி திரையுலகம்.
1971ஆம் ஆண்டு ‘குட்டி’ ௭ன்ற ஹிந்தி திரைப்படத்தின் மூலம் சினிமா துறையில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து எண்ணற்ற பாடல்களை அவர் பாடியுள்ளார்.

1971ம் ஆண்டு முதல் திரையுலகில் இருந்த வாணி ஜெயராம் 10,000க்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம் உட்பட 19 மொழிகளில் வாணி ஜெயராம் பாடல்களை பாடியுள்ளார்.திரையிசைப் பாடல்கள் மட்டுமின்றி பல பக்திப் பாடல்களையும், தனியிசைப் பாடல்களையும் வாணி ஜெயராம் பாடியுள்ளார். 

கேள்வியின் நாயகனே, ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்,
மேகமே… மேகமே…” ,  ”இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே.
  உள்ளிட்ட பல பாடல்கள் மூலம் புகழ்பெற்றார் வாணி ஜெயராம். தமிழ் திரையுலகில் 1974-ம் ஆண்டு தீர்க்கசுமங்கலி என்ற படத்தின் மல்லிகை என் மன்னன் மயங்கும் என்ற பாடலை முதல் முறையாக பாடினார்.

ஏழு ஸ்வரங்களின் கான சரஸ்வதி என புகழப்படுபவர் வாணி ஜெயராம். 1975, 1980 மற்றும் 1991- ம் ஆண்டுகளில் சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதுகளை பெற்றுள்ளார் வாணி ஜெயராம். இந்தாண்டு குடியரசு தினத்தன்று ஒன்றிய அரசின் பத்மபூஷன் விருது வாணி ஜெயராமுக்கு அறிவிக்கப்பட்டது.

அண்மையில் குடியரசு விழாவையொட்டி வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த விருதைப் பெறுவதற்கு முன்பாக அவர் தற்போது உயிரிழந்துள்ளது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
வாணி ஜெயராமின் மறைவுக்கு திரையுலகத்தைச் சேர்ந்தவர்களும் இசையுலகத்தைச் சேர்ந்தவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories