வாணியம்பாடி-கூட்ட நெரிசலில் சிக்கி வேட்டி – சேலை பெற வந்த 4 பெண்கள் பலி..

938763 - 2026

வாணியம்பாடியில் தைப்பூசத்தை முன்னிட்டு இலவச புடவைகள் வழங்கும் விழாவிற்காக டோக்கன்களை பெற வந்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும் கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்த 12 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வாரச்சந்தை மைதானம் அருகில் ஐயப்பன் என்பவர் ஜல்லி நிறுவனம் நடத்தி வருகிறார். நிறுவனத்தின் சார்பில் கடந்த சில ஆண்டுகளாக தைப்பூசத்தன்று இலவச புடவைகள் வழங்கி வருகின்றார். இந்நிலையில் நாளை தைப்பூசத்தை முன்னிட்டு இலவச புடவைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற  உள்ளது. 

இதற்காக இன்று டோக்கன்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. டோக்கன்கள் பெற சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் நிறுவனத்தின் நுழைவாயிலில் நின்று கொண்டு இருந்தனர். அப்போது டோக்கன் வினியோகம் செய்ய நிறுவனத்தின் கேட் திறக்கப்பட்டது. அப்போது கூட்டத்தில் இருந்த பெண்கள் முண்டியடித்து உள்ளே சென்றபோது கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 16 பேர் பெண்கள் மயக்கம் அடைந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வருவாய் துறையினர் மற்றும் போலீசார் விரைந்து வந்து மயக்கம் அடைந்த பெண்களை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் குரும்பட்டி பகுதியை சேர்ந்த வள்ளியம்மாள் (60), ஈச்சம்பட்டு பகுதியை சேர்ந்த நாகம்மாள் (60), அரபாண்ட குப்பம் பகுதியை சேர்ந்த ராஜாத்தி (60) மற்றும் பழைய வாணியம்பாடியைச் சேர்ந்த மல்லிகா(65) என நான்கு மூதாட்டிகள் சிகிச்சை பலனியின்றி பலியாகினர்.

12 பேர் காயமுற்றனர் இவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தகவல் அறிந்து வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன்,  நேரில் சென்று சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

சம்பவம் குறித்து நகர போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஐயப்பனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இலவச புடவை வழங்கும் விழாவிற்காக டோக்கன் பெற முண்டியடித்துக் கொண்டு கூட்ட நெரிசலில் சிக்கி நான்கு பேர் பலியான சம்பவம் பெரும் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories