
ரூ.800 கோடி மோசடி வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்த ஹிஜாவுநிறுவன நிர்வாகிகளில் ஒருவர் சென்னையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை தாண்டவராயன் முதலி தெருவைச் சேர்ந்தவர் நேரு (47). இவர் சென்னை கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் சாலையில் செயல்பட்ட ஹிஜாவு நிறுவனத்தில் முகவராகஇருந்தார். இவரை நம்பி பல்வேறுபகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.
நேருவும் நிறைய பேரைஅந்த நிறுவனத்தில் முதலீடு செய்யவைத்தார். ஆனால் அறிவித்தபடிஅந்த நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு வட்டி தொகையை கொடுக்கவில்லை. முதலீடு செய்த பணத்தையும் திரும்பி வழங்கவில்லை.
இதில் பணத்தை இழந்த சுமார் 10 ஆயிரம் பேர், தங்களிடம் ரூ.800கோடி வரை மோசடி செய்யப்பட்டதாக தமிழக காவல் துறையின் பொருளாதார குற்றப்பிரிவில் புகார்அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அந்த நிறுவனத்தின் நிர்வாகிகள், முகவர்கள் என 6 பேரைஅடுத்தடுத்து கைது செய்தனர். அந்நிறுவன தலைவர் சவுந்திரராஜன் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
இந்த வழக்கில் நேருவும் கடந்தநவம்பர் மாதம் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்தார். ஆனால்வழக்கு காரணமாக நேருவின் குடும்பம் பொருளாதார நெருக்கடியில் சிக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் மிகுந்த மன வேதனை மற்றும் விரக்தியுடன் காணப்பட்ட நேரு, நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணைக்கு சென்று வந்தார். இதனால் மேலும் மன வேதனையடைந்த அவர் வீட்டில் தனது அறையில் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள தண்டையார்பேட்டை போலீஸார் இவர் தற்கொலைக்கு முழு காரணம் என்ன என்பது குறித்து இன்று விசாரணை நடத்தி வருகின்றனர்
