
— டி.எஸ். வேங்கடேசன் —
மணிப்பூர் போன்று விரைவில் கோவா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கலவரம், வன்முறை சம்பவங்கள் அரங்கேறும் வாய்ப்புள்ளதாக வேத விஞ்ஞான ஆய்வு மைத்தின் நிறுவனரும், பத்திரிகையாளருமான பால கெளதமன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் மறைந்த பத்திரிகையாளர் ஹரன் நினைவு பரிசு வழங்கும் விழா சென்னை தி.நகரில் கடந்த 14ம் தேதி நடைபெற்றது. இந்தாண்டுக்கான பரிசு புலனாய்வு பத்திரிகையாளர் வி அபிநவ் விநாயக்கு வழங்கப்பட்டது. (சென்ற ஆண்டு ஹரன் விருது, கட்டுரையாளருக்கு – டி.எஸ்.வேங்கடேசன் – க்கு வழங்கப்பட்டது நினைவு கூரத்தக்கது.)
நிகழ்ச்சியில் பேசிய. பால கெளதமன். “ இந்தாண்டு மணிப்பூரில் கலவரம் வெடிக்கும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்தாண்டே ஆரூடமாக கூறினார். நாடாளுமன்ற கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக மே மாத சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி, நாடாளுமன்றத்தை முடக்கி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி கூட்டணியில் இடம் பெற்றுள்ளவை அமலியில் ஈடுபட்டன. சமீபத்தில் கோவா மாநிலத்தில் பாதிரியார்கள் மாநாடு நடத்தப்பட்டது. இதில் விரைவில் கோவாவிலும் மத கலவரம் நடைபெறும் என்றும் அது தொடர்பான ஆலோசனைகள், எப்படி அதை செயல்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆவி மெஷினரிகள் பஞ்சாபையும் விட்டு வைக்கவில்லை. அங்கு 1 சதவீதமாக இருந்த அவர்களின் எண்ணிக்கை 15 சதவீதமாக உயர்ந்துள்ளதாக எனக்கு முன்பு பேசிய பஞ்சாப் , ஹரியானா உயர்நீதின்ற வழக்கறிஞர் ஜஸ்மித் சிங் பேடி கூறியதை சுட்டிக்காட்டினார்.
ஹரியானா மாநிலத்தில் நூவு பகுதியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த மவுலானா சம்சுதீன் குவாஸ்மி பேசிய வீடியோவை சுட்டிக் காட்டி பேசினார். மத வெறுப்பு அரசியலுக்கு பெயர் பெற்ற இவர் தரூல் உலும் தியோபந்த் மதராசாவில் கடந்த ஓராண்டுக்கு மேலாக தற்காப்பு பயிற்சி என்ற பெயரில் இஸ்லாமியர்களுக்கு ஆயுத பயிற்சி அளிக்கப்பட்டு வந்ததாக கூறியுள்ளார். இந்த வீடியோ பதிவு உங்கள் கட்டுரை ஆசிரியரின் பார்வைக்கு வந்தது. அதில். அவர் பேசிய சுருக்கத்தை காண்போம்.:” இது ஹரியானா கலவரம் இல்லை. மேவாத் கலவரம். இது பள்ளதாக்கு, மலைப்பகுதி என பலவாறனாது. மேவாத்தில் இஸ்லமாமியர்கள் அதிகம். நாடு விடுதலைக்கு முன்பாக இங்கு இஸ்லாமியர்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் குடிப்பது, திருடுவது கொள்ளை அடிப்பதை தொழிலாக கொண்டவர்கள். இவர்களின் வீடுகளுக்கு கதவுகள் கூட கிடையாது. விரும்பதோலில் இவர்களுக்கு ஈடு இணை கிடையாது. இவர்களை நல்வழிப்படுத்த தப்ளிக் ஜமாத் இயக்கம் தொடங்கப்பட்டது. சுன்னி பிரிவைச் சேர்ந்த இவர்களுக்கான இந்த அமைப்பை மவுலானா முகமது இலியாஷ் கடந்த 1926ம் ஆண்டு தொடங்கினார். இது பல நாடுகளுக்கு பரவிய ஆல் போல் தழைத்து உள்ளது. பல உயர் பதவிகளில் அவர்கள் உள்ளனர். தப்ளிக் ஜமாத் என்றால் மதநம்பிக்கையை பரப்பும் சமுதாய அமைப்பு என்பது பொருளாகும். தியோ பந்த் கொள்கைகள் டெல்லிக்கு அருகே தியோ பந்த என்ற இடத்தில்தொடங்கப்பட்டது. இதன் நோக்கம் இஸ்லாமியர்கள் இறை நம்பிக்கை கொண்டவர்கள் இருக்க வேண்டும் என்பதுதான்”.
“ நாடு விடுதலையான போது மேவாத் பாகிஸ்தானுக்கு ஒதுக்கப்பட்டது. முஸ்லீம்கள் 99 சதவீதம் உள்ளதால் எங்களை பிரிக்க இந்தசூழ்ச்சி. நாங்கள் ஒற்றுமையாக இருந்தால் அது அரசியல் தலைவர்களுக்கு பிடிக்காது. பல கொடுமைகள் அப்போது செய்ய தொடங்கினர். இந்திய பகுதியான மேவாத்தில், பஞ்சாபின் ஒரு பகுதி, ஹரியானாவின் ஒரு பகுதி. ராஜஸ்தானின் ஒருபகுதி என மூன்றாக பிரித்தனர். இவர்கள் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எருமை மாடுகளை வளர்த்து பால் வியாபாரம் செய்து வருகிகன்றனர். இப்புகுதியில் கழிப்பறைகள் கிடையாது. பள்ளிவாசலில் உள்ள இரண்டை ஊர்மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். உலக நாடுகளில் பள்ளிவாசல்களை கட்ட லட்சக்கணக்கில் நிதி உதவி அளித்து வருகின்றனர்.
“ கடந்தாண்டு டெல்லியை கலக்கிய விவசாயிகள் போராட்டத்தின்போது, எல்லை அருகே கூடாரம் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு தங்களின் விளைப்பொருட்களை பயன்படுத்தி உணவு சமைத்து கொடுத்து உதவினர்.
ஆர்எஸ்எஸ் காரன்கள், பஜ்ரங்தளத்தினர் முஸ்லீம்களை குறி வைத்து தாக்கி கொன்று வருகின்றனர். 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன்பாக மத கலவரங்களை தொடங்க அவர்கள் முயன்று வருகின்றனர். குறிப்பாக மேவாத், நூவு தான் அவர்கள் குறி. இதை எதிர்கொண்டு, பள்ளிவாசலில் கடந்தாண்டு முதல் அனைவருக்கும் தற்காப்பு கலை பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது. நவீன ஆயுதங்களை பயன்படுத்துவதும் இதில் அடங்கும். விஹெச்பி, பஜ்ரங்தளம் ஊர்வலமாக வந்தனர். முஸ்லீமகளை எளிதாக தாக்கிவிடலாம். அவர்கள் கோழைகள். என்ன தெரியும் என நினைத்தனர். ஆனால் எங்கள் ஆட்கள் அவர்களை ஓட ஓட விரட்டி அடித்தனர். நூற்றுக்கணக்கானவர்களை வெட்டிக் கொன்றனர். இது ஊடகங்களில் வராது. காஃபீர்களை கொன்று அவர்களை நரகத்துக்கு அநுப்பிய பிறகே சொர்க்கத்துக்கு முஸ்லீம்கள் செல்ல வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம். கட்டளை. இதை யாரும் மீற முடியாது. காஃபீர்களை கொல்ல வேண்டும். அப்போதுதான் அல்லா உள்ள சொர்க்கத்திற்கு செல்ல முடியும். தற்காப்பு பயிற்சிகளை தரூல் இஸ்லாம் மதரஸா முதல்வர் மவுலானா அறிக்கை மூலமாக தகவல் தெரிவித்து ஆயுத தற்காப்பு பயிற்சியை அளித்து வருகிறார்.
பழனி பாபாவை இளைஞர்கள் முன்மாதிரயாக கொண்டு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ( நாச வேலைகள், குண்டு வெடிப்பு, ஹிந்து முன்னணி நிறுவனர் ராம கோபாலானின் மீதாக தாகுதல்களில் ஈடுபட்டவர்) அல்லாவின் வழியை பின்பற்றினால்தான் ஷாதாத் நிலை கிடைக்கும்”
மேற்கூறிய அவரது வீடியோ பேச்சில் இருந்து வன்முறை தூண்டும் வகையில் பேசியுள்ளார். பல்வேறு நாடுகளில் இருந்து கொரோனா நோயை பரப்பும் நோக்கத்துடன் நாடு முழுவதும் குழுவாக சென்று பள்ளிவாசல்களில் தங்கி பரப்பியதை நாம் மறக்க முடியாது என பால கெளதமன் குறிப்பிட்டார்.
“ நீதிபதி ஒருவர் வெளிநாட்டு தப்ளிக் ஜமாத் குழுவினர்களை விருந்தினர்கள். பாவித்து உரிய மரியாதை தர வேண்டும் என கூறி அவர்களை நாடு திரும்ப அனுப்ப உத்தரவிட்டார். இப்போது அவர் இதை திரும்ப பெறுவரா? பொறுப்பேற்பாரா?
பள்ளிவாசல்களில் என்ன நடக்கிறது என்பது யாருக்கும் தெரியாது?. மணிப்பூர் கலவரத்தின் போது அதிகமாக துடித்து ஆதரவு தெரிவித்தது தமிழ்நாடு மட்டுமே. ஏன் இங்குள்ள கிறிஸ்தவர்களால் இயக்கப்படும் திராவிட மாடல் அரசு அனைத்துஉதவிகளையும் செய்ய முன்வந்தது. விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிக்க முன்வந்தது. ( உதயநிதியின் மகன் இன்ப நிதி மணிப்பூர் மாநில கால்பந்தாட்ட குழுவில் இடம் பெற்றுள்ளார். சர்வதேச போட்டிகளுக்கு தமிழக வீரர்களை அனுப்ப கோட்டை விட்ட தமிழக உதயநிதியின் பொறுப்பில் உள்ள விளையாட்டுத்துறை மணிப்பூர் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கிறதாம்!).
தமிழகத்தில் கோயில்களுக்கு சீல் வைக்கப்படுவதற்கான காரணம்ஜாதி மோதல்களே இதன் பின்னணியில் விடுதலை சிறுத்தைகள் உள்ளனர். இவர்களுக்கு சனாதன அழிப்பு என்ற பெயரில் இந்து மதத்தை வேரறுக்க வேண்டும். இதற்கு கோயில்களை மூடவதுதான் முதல் வழி. சர்ச்களில் சாதி பிரச்னை இல்லையா ? இவர்கள் கண்களுக்கு அது தெரியாது. தமிழகம் அபாய கட்டத்தில் உள்ளது. காஷ்மீர், மேற்கு வங்கம், மணிப்பூரை போன்று இங்கும் கலவரம் உருவாகலாம் ஊஷராக இருக்க வேண்டும். மத்திய அரசு இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்” என அவர் பேசினார்.
வேத விஞ்ஞான ஆய்வு மையம் கூறியதை மத்திய விசாரணை முகமை ஏற்றுக் கொண்டுள்ளது. தீவிரவாத தாக்குதலின் போது,. தீ விரைவாக பிடிக்க பரவ காரணம் ஒரு வித ரசாயன கலப்புதான். இதுபோல தமிழகத்தில் நடைபெற்ற இந்து மத தலைவர்கள் மீதான கொலைகளில், அனைவருக்கும் கழுத்தில் வெட்டு. விரல் நகம் துண்டிப்பு, கை , கால் வெட்டப்படுவது என ஒரே மாதிரியாக உள்ளது. இதையும் என்ஐஏ திருபுபவனம் ராமலிங்கம் கொலை வழக்கில் கூறியுள்ளது. இது ஜிகாத முறை கொலை. இது எங்கள் மைத்தின் வெற்றியாகும் என்றார்.
முன்னதாக பேசிய பஞ்சாப், ஹரியானா உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஜஸ்மித் சிங் பஞ்சாபில் பிரிவினைவாதம், எல்லை தாண்டிய பயங்கரவாதம், சர்வதேச சதி, போதை பொருட்கள் உள்ளன. இதை தவிர பஞ்சாபில் 65,000 மிஷினர்கள் உள்ளனர். கொரோனாவின் போது இவர்கள் ஏழை, மற்றும் அப்பாவிகளை மூளைச் சலவை செய்து நோய்களை தீர்ப்போம். பிரச்னைகளுக்கு முடிவுரை எ[ழுதுவோம். பணம் கிடைக்கும், வேவை கிடைக்கும். சமுக அந்தஸ்து கிடைக்கும். சாதி பிரச்னைகள் இருக்காது என பொய் வாக்குறுதிகளை கூறி மயக்கிமதமாற்றம் செய்தனர். அவர்களுக்கு உணவு, உடை, மருந்துகளை கொடுத்தும் உள்ளனர். மதம் மாறிய பிறகுதான் ஏமாற்றப்பட்டதை அவர்கள் உணர்ந்தனர். தமிழ்நாடு, தெலங்கானா இது போன்று இருந்தது. பஞ்சாபின் எல்லைப்பகுதிகளில் மதமாற்றம் அதிகமாக உள்ளது என தெரிவித்தார்.
ஸ்ரீடிவியின் இயக்குநர் ராம வெங்கடாத்திரி, யூ டிப் ஊடகவியாலாளர் ஓமாம்புலியூர் ஜெயராமன் உள்ளிட்டோர் பேசினர். நிகழ்ச்சியை ரங்கநாதன் தொகுத்து வழங்கினார்.
நேரலையில் நிகழ்ச்சியின் தொகுப்பு