கோயில்களை மட்டும் சீரழிக்கும் அரசே! கோயிலை விட்டு வெளியேறு என்று வலியுறுத்தி, ஜூலை 21 ஞாயிறு அன்று, இந்து முன்னணி அமைப்பு மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது.
இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்ட துண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது…
***
கோயில்களை மட்டும் சீரழிக்கும் அரசே!
கோயிலை விட்டு வெளியேறு!
தமிழகத்தில் தமிழர்களின் பண்பாடு கலாச்சாரம் இவற்றின் மையமாக விளங்கும் கோவில்களை நாத்திக ஹிந்து விரோத திராவிட மாடல் அரசு தொடர்ந்து சீரழித்து வருகிறது.
1.தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல ஆயிரம் கோவில்கள் இடிந்த நிலையில் சிதிலமடைந்து சீரழிந்து கிடக்கிறது.
2.பல ஆயிரம் கோவில்களில் விளக்கு இல்லை வழியாடு இல்லை ஒரு கால பூஜை கூட நடைபெறுவதில்லை.
3.தரிசன கட்டணம் அர்ச்சனை கட்டணம் நேர்த்திக்கடன் கட்டணம் விளக்கு பூஜை கட்டணம் மொட்டை அடிக்க கட்டணம்காது குத்த கட்டணம் என பல பெயர்களில் கோவில்களில் கட்டண கொள்ளை அடிக்கப்படுகிறது.
4.இந்து கோவில் திருவிழாவிற்கு கூடுதல் கட்டணத்துடன் அரசு பேருந்துகள் ஆனால் முஸ்லிம்கள் ஹஜ் யாத்திரை செல்ல ஒரு நபருக்கு 12,000 ரூபாயிலிருந்து 25 ஆயிரம் ஆக மானியத்தை உயர்த்தி தமிழக அரசு வழங்கியுள்ளது.
5.மக்கள் வரிப்பணத்தில் சர்ச் மசூதி ஊழியர்களுக்கு இரு சக்கர வாகனம் ஆனால் கோவில் ஊழியர்களுக்கு எதுவும் இல்லை.
6.நாகூர் சந்தனக்கூடு நடத்த 45 கிலோ சந்தன மரம் இலவசம் ரம்ஜான் நோன்பு கஞ்சி கொடுக்க 70 லட்சம் கிலோ அரிசி இலவசம் ஆனால் ஆடி மாதம் அம்மனுக்கு கூழ் ஊற்ற அரசு எதுவும் தருவதில்லை.
7.மசூதி சர்ச் சீரமைக்க கோடிக்கணக்கில் மக்கள் வரிப்பணத்தை தமிழக அரசு செலவிடுகிறது கோவில்களை பராமரிக்க அரசு எதுவும் தருவதில்லை.
8. கோவில் நிலத்தில் பஸ் ஸ்டாண்ட் நீதிமன்றம் ஆட்சியர் அலுவலகம் காவல்துறை அலுவலகம் என பல அரசு அலுவலகங்கள் ஆனால் அரசு நிலத்தில் சிறு கோவில் இருந்தாலும் அரசால் இடித்து தள்ளப்படுகிறது.
9. திமுக அரசு பொறுப்பேற்ற பின்பு நூற்றுக்கணக்கான கோவில்கள் இடிக்கப்பட்டுள்ளது ஆனால் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும் சட்டவிரோத அந்நிய சர்ச், மசூதிகளை அகற்ற தமிழக அரசு அஞ்சுகிறது.
10.கோவில் வருமானத்தில் அதிகாரிகள் மற்றும் ஆளும் கட்சியினர் ஆடம்பர கார் விமானப்பயணம் நட்சத்திர ஓட்டலில் கூட்டம் அசைவ உணவு என சொகுசு வாழ்க்கை வாழ்கிறார்கள்.
11. இந்து கோவில்களில் விலை உயர்ந்த விக்கிரகங்கள் திருடப்பட்டு உள்ளது அதை மீட்க எந்த நடவடிக்கையும் இல்லை கோவில் விக்ரகங்கள் சமூக விரோதிகளால் உடைக்கப்படுவதையும் அரசு கண்டு கொள்வதில்லை.
12.கோவில் நகைகளை உருக்கி அடமானம் வைப்பதாக கூறி, விஞ்ஞான பூர்வமாக ஊழல் மூலம் கொள்ளை நடைபெறுகிறது.
13.அந்நிய கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களை பரப்ப பள்ளி கல்லூரி நடத்த அரசு மானியம் வழங்குகிறது. ஹிந்து கோவில்கள் மூலமாக சமய கருத்துக்களை கற்பிக்க ஏற்பாடு இல்லை.
14.அரசு நிர்வாகத்தால் உண்டியல் பணம் திருடப்படுகிறது. காணிக்கை நகைகள் களவாடப்படுகிறது.
15.கோவிலை அழித்து அதன் சொத்துக்களை புறம்போக்கு சொத்துக்களாகவும் தனியார் சொத்துக்களாகவும் பட்டா மாற்றம் செய்யும் மோசடி தொடர்கிறது.
16.கடந்த மூன்று ஆண்டுகளில் அரசின் உதாசீனத்தால் தேர் திருவிழாக்களில் தேர் கவிழ்ந்து 15 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
17.கோவில் கும்பாபிஷேகம் நடத்திட அனுமதி பெறவே லஞ்சம் தர வேண்டியுள்ளது. தவிர அரசு அதிகாரிகள் கும்பாபிஷேக திருப்பணிகளை காரணம் காட்டி வசூல் கொள்ளையில் ஈடுபடுகிறார்கள்.
தமிழகத்தில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக நம் முன்னோர்கள் பாதுகாத்து, பராமரித்து வந்த கோவில்களின் புனிதத்தை காத்திட லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மற்றும் சொத்துக்களை பாதுகாத்திட பக்தர்கள் ஓரணியில் திரண்டு போராட்டத்தில் திரளாக கலந்து கொள்ள வேண்டுகிறோம்.
மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் சிறப்புரையாற்றுவார்கள்.