இன்றைய (ஆக.,30) விலை: பெட்ரோல் ரூ.81.35; டீசல் ரூ.73.88
⛽பெட்ரோல், டீசல் விலை விவரம்:
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் நேற்றைய விலையிலிருந்து 13 காசுகள் அதிகரித்து பெட்ரோல் லிட்டருக்கு ரூ.81.35 காசுகளாகவும், டீசல் 19 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.73.88 காசுகளாகவும் உள்ளன
இந்நிலையில் விலை உயர்வு தற்காலிகமானதுதான் என நம்புவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து பொருளாதார விவகாரத்துறை செயலர் கார்க் தெரிவிக்கையில், கச்சா எண்ணெய் விலை 70 டாலரிலிருந்து 75 டாலராக உயர்ந்ததே விலை உயர்வுக்கு காரணம் எனவும், விரைவில் கச்சா எண்ணெய் விலை 70 டாலருக்கு வரும் எனவும் அவர் தெரிவித்தார்




