எம்.ஜி.ஆர். பல்கலை., துணைவேந்தராக டாக்டர் சுதா சேஷய்யன் நியமனம்!

சற்றுமுன் சென்னை தமிழகம்
sudha seshaiyan - 2026



சென்னை: தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழக துணைவேந்தராக சுதா சேஷய்யனை நியமித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டார்.

டிசம்பர் 27ஆம் தேதி எம்.ஜி.ஆர். பல்கலை துணைவேந்தராக இருந்த கீதாலட்சுமி ஓய்வு பெற்றார். அவர் ஓய்வு பெற்ற இரு நாட்களில் புதிய துணைவேந்தராக சுதா சேஷய்யன் நியமனம் செய்யப் பட்டுள்ளார்.

இன்று ஆளுநர் மாளிகையில், டாக்டர் சுதா சேஷய்யனுக்கு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கான துணைவேந்தராக நியமனம் செய்யப் பட்டதற்கான ஆணையை ஆளுநர் வழங்கினார். கூடுதல் தலைமைச் செயலாளர் ஆர்.ராஜகோபால் உடனிருந்தார்.



Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.