5 ஆயிரம் பேர் அதிகாலையில் கைது; சென்னையில் குவிந்தனர் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டை நோக்கி பேரணி செல்ல முயன்று, சென்னை சேப்பாக்கத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர் சங்கத்தினர் கைது செய்யப் பட்டனர்.
ராக்கெட் ராஜா சென்னையில் கைது
ராக்கெட்ராஜா ரவுடித்தொழிலில் 25 ஆண்டுகளை நிறைவு பெற்றதை சென்னையில் அடுத்து நட்சத்திர விடுதியில் நண்பர்களுக்கு விருந்து வைத்து கொண்டாடியுள்ளார்
90 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் லிப்கோ புத்தக நிறுவனம்!
சென்னை: தி லிட்டில் ப்ளவர் கம்பெனி - லிப்கோ பதிப்பக நிறுவனம், 90 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. பதிப்பகத் துறையில் ஈடுபட்டு பல்வேறு ஆன்மிக தத்துவ வரலாற்று நூல்களை வெளியிட்டு வரும் இந்நிறுவனம் 90ஆவது ஆண்டைக் கொண்டாடுகிறது.
ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கு: 4 மருத்துவர்கள் இன்று ஆஜர்
ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முன் 4 மருத்துவர்கள் இன்று ஆஜராக உத்தரவிட்டுள்ளது. அப்பல்லோ மருத்துவர்கள் ஜெயஸ்ரீ கோபால், ராமச்சந்திரன் உள்பட 3 பேர் ஆஜராக உள்ளனர். மேலும் முதல்வரின்...
காஷ்மீர் கல்லெறி சம்பவத்தில் படுகாயமடைந்த சென்னை பயணி மரணம்!
ஜம்மு காஷ்மீரில் பயணம் மேற்கொண்டிருந்த சென்னையைச் சேர்ந்த பயணி ஒருவர், காஷ்மீர் கல்லெறிச் சம்பவத்தில் படுகாயமடைந்து, இன்று மரணம் அடைந்தார்.
பேனரை அகற்ற கூறிய டிராபிக் ராமசாமி மீது செருப்பு வீசிய அதிமுக பெண் நிர்வாகி
அப்போது அங்கு வந்த அதிமுக பெண் நிர்வாகி ஒருவர், டிராபிக் ராமசாமியின் மீது செருப்பு மற்றும் துடைப்பத்தை வீசி தாக்குதல் நடத்தினார்.
10, +2 தேர்வு முடிவுகளை டிவி., நாளிதழில் வெளியிட தடை கோரி மனு!
மாணவர்களின் தற்கொலையைத் தடுக்க பள்ளிகளிலேயே 10, +2 தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்று சென்னையில் செந்தில் குமார் என்பவர் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் புதன் கிழமை விசாரணைக்கு வருகிறது.
மணல் கொள்ளையரால் தாக்கப்பட்டு உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிவாரண உதவி
அவரது உடலைப் பார்த்து கதறி அழுத உறவினர்கள், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக் கோரி, பாளையங்கோட்டை அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் காவலர் ஜெகதீஷ் துரையின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்
திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுப்ரியா மரண வழக்கை கைவிடுவதாக சிபிஐ அறிவிப்பு
கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்து வந்த டிஎஸ்பி விஷ்ணுப்ரியா கடந்த 2015ம் ஆண்டு உயிரிழந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக எழுந்த புகாரினை அடுத்து, இந்த வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டது.இந்த நிலையில்,...
மெரினாவில் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம்: அடிக்கல் நாட்டிய இபிஎஸ் – ஓபிஎஸ்!
சென்னை மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் ரூ. 50 கோடியே 80 லட்சம் மதிப்பில் நினைவு மண்டபம் கட்டப்படும் என தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்து இருந்தது. அதன்படி ரூ. 36,806 சதுர மீட்டர் பரப்பளவில் அமையும் ஜெயலலிதா நினைவு மண்டபம், பீனிக்ஸ் பறவை போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.
நெல்லையைச் சேர்ந்த ரவுடி ராக்கெட் ராஜா கூட்டாளிகளுடன் சென்னையில் கைது
திருநெல்வேலியைச் சேர்ந்தவர் ரவுடி ராக்கெட் ராஜா, வெங்கடேச பண்ணையாரின் வலது கரமாக செயல்பட்டவர்.
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி மீண்டும் தொடங்கிய போராட்டம்
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி, சென்ற வருடத்தைப் போல் இந்த வருடம், நீட் தேர்வு முடிவடைந்த நிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இன்று சென்னையில் சிபிஎஸ்இ., அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி செய்த ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.