கரடி தாக்கிய மேலும் ஒருவர் மரணம்: இன்னொரு கரடியைப் பிடிக்க தீவிரம்

Published:

SAMSUNG DIGITAL CAMERA உதகை: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே தேயிலைத் தோட்டத்தில் கரடி தாக்கியதில், மாதி என்ற பெண் உயிரிழந்தார். அவரைக் காப்பாற்றச் சென்ற அவரது கணவர் ஹாலன் கரடியால் மோசமாகத் தாக்கப்பட்டார். படுகாயம் அடைந்த அவர், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதனால் கரடி தாக்கி கணவன் – மனைவி இருவருமே உயிரிழந்துள்ளனர். இதை அடுத்து, அந்த ஆட்கொல்லி கரடியைப் பிடிக்க, வனத்துறை மயக்க ஊசியுடன் தேடியது. ஆனால், மயக்க ஊசிக்கு கரடி அகப்படாமல் தப்பியதால், கரடி நேற்று சுட்டுக் கொல்லப்பட்டது. இதனிடையே அந்தக் கரடி உலவிய கோத்தகிரி தேயிலைத் தோட்டப் பகுதியில் மேலும் ஒரு பெண் கரடி உலவுவதாக கிராமத்தினர் தகவல் தெரிவித்தனர். அதனைப் பிடித்து வெளியே கொண்டு செல்ல தொடர் போராட்டம் நடத்தப்பட்டது. இதை அடுத்து, கரடியை உயிரோடு பிடிக்க 3 இடங்களில் வனத்துறையினர் கூண்டுகளை வைத்துள்ளனர். இருப்பினும் கரடி இன்னும் அவற்றில் அகப்படவில்லை. இதனால் கோத்தகிரி – குன்னூர் சாலையில் பொதுமக்கள் பயத்துடனேயே நடமாடுகின்றனர்.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img