கிணற்றில் விழுந்த தம்பதியர் நீச்சல் தெரியாமல் பலி..

ஆத்தூர் அருகே தெற்கு காடு பகுதியில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராரில் மனைவி கிணற்றில் குதித்தார்.இவரை காப்பாற்ற கிணற்றில் குதித்த கணவரும் நீச்சல் தெரியாமல் மூச்சு திணறி பலியாயினர்.இருவரும் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை‌ ஏற்படுத்தியுள்ளது.தீயணைப்புதுறையினர் உடலை மீட்டனர்.போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள 33வது வார்டு தெற்கு காடு சேரன் சாலையில் விவசாயி முனியன் மகன் விஜயகுமார் (30)இவருக்கும் கீரிப்பட்டியைச் சேர்ந்த செல்வி திருப்பதி தம்பதிகளின் மகள் கௌசல்யாவுக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது,

இதில் 4 வயதில் ஹரிஹரசுதன் என்ற மகனும் கீர்த்தி என்கிற 7 மாத பெண் குழந்தையும் உள்ள நிலையில்,
இவர்கள் அதே பகுதியில் உள்ள ரவி என்பவரின் விவசாயத் தோட்டத்தில் குத்தகைக்கு விவசாயம் செய்து வருகின்றனர்,

இந்நிலையில் கணவன் மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது அதே போல் இன்றும் கணவன் மனைவிக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டதில் கோபமடைந்த கௌசல்யா வீட்டின் அருகே உள்ள விவசாய தோட்ட கிணற்றில் குதித்துள்ளார் அதை பார்த்த கணவன் விஜயகுமாரும் அவரை காப்பாற்ற கிணற்றில் குதித்த போது இருவருக்கும் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்,

IMG 20230201 WA0108 - 2026

அப்போது விஜயகுமாரி தந்தை முனியன் கூச்சலிடவே அக்கம் பக்கதினர் வந்து ஆத்தூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் விரைந்து வந்த தீயணைப்புதுறையினர் நிலைய அலுவலர் அசோகன் தலைமையிலான தீயணைப்புத் துறை மற்றும் மீட்பு படை குழுவினர் நீண்ட நேரம் போராட்டத்துக்கு பின்னர் இருவரின் உடலையும் மீட்டனர் .

இதை அறிந்த ஆத்தூர் நகர காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

குடும்பத் தகராறில் கணவன் மனைவி ஒரே நேரத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இச் சம்பவம் குறித்து ஆத்தூர் நகர‌ போலீசார்‌ விசாரணை நடத்தி வருகின்றனர்.

IMG 20230201 WA0107 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories