திருப்பூர்: பெட்ரோல், டீசல் கடனுக்கு வழங்கப் படுகிறது. கேட்கவே ஆச்சரியப் படுத்தும் செய்தி இதுதான்!
திருப்பூரில் பெட்ரோல், டீசல் வாங்க கடன் வழங்கும் திட்டத்தை தனியார் நிறுவனம் ஒன்று தொடங்கியது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
விலை உயர்வை சமாளிக்க எரிபொருட்களுக்கு கடன் வழங்குவதாக அந்நிறுவனம் தெரிவித்தது. ரூ.100 எரி பொருட்கள் நிரப்புபவருக்கு மாதத்திற்கு ஒரு ரூபாய் 50 காசுகள் வட்டியாக வசூலிக்கப்படுகிறது.
தவணை முறை விற்பனை, கடனுக்கு பொருள்கள் வழங்கல் போன்ற விற்பனை முறையில் பெட்ரோல் டீசலும் வந்துவிட்டது ஏதோ ஒரு மாற்றத்தின் துவக்கப் புள்ளியாக இருக்குமோ என்று மக்கள் கவலைப் படத் தொடங்கிவிட்டனர்.




