வாக்காளர் பட்டியல் சேர்க்க திருத்தம் செய்ய.. இன்று வாய்ப்பு!

Published:

voters id - 2026

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது!

தமிழகம் முழுவதும் 67 ஆயிரம் வாக்குச் சாவடிகளில், 4ஆம் கட்ட வாக்காளர்கள் பெயர் சேர்ப்பு மற்றும் திருத்தம் செய்யும் முகாம் இன்று நடைபெறுகிறது. வரைவு வாக்காளர் பட்டியலின்படி, தமிழகத்தில் 5 கோடியே 83 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

வருகிற ஜனவரி 1ம் தேதியுடன் 18 வயதை அடைவோர், இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்கள் தங்கள் பெயரை சேர்க்க மனு அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

இதுதவிர பட்டியலில் பெயர் நீக்கம், முகவரி மாற்றம் போன்ற திருத்தங்களையும் மேற்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

நான்காவது கட்டமாக, 67 ஆயிரத்து 654 வாக்குச்சாவடிகளிலும் இன்று சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

Related articles

Recent articles

spot_img