மதுரை: மதுரை நகரில் பல்வேறு கோயில்களில் குருப்பெயர்ச்சியையொட்டி, மகாயாகம் நடைபெறுகிறது.
மதுரை மேலமடை சௌபாக்யா விநாயகர் ஆலயத்தில் நவ. 15.ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு குருப்பெயர்ச்சி மகாயாகமும், பரிகார அர்ச்சனைகளும் நடைபெறும்.
நவ.16.ம் தேதி திங்கள்கிழமை காலை 7 மணிக்கு மதுரை மதிச்சியம் ஆவின் பாலகம் அருகே உள்ள பாலவிநாயகர் ஆலயத்தில், குருப்பெயர்ச்சி மகாயாகத்தை ஈஸ்வர பட்டர் தலைமையில் நடைபெறுகிறது. இதேபோல், மதுரை கோமதிபுரம் ஜூப்பிலி டவுன் அருள்மிகு ஞானசித்தி விநாயகர் ஆலயத்தில் காலை 9 மணிக்கு குருப்பெயர்ச்சி மஹா யாகமும், குரு ஃப்ரீதி ஹோமங்களும், அபிஷேகம் நடைபெறுகிறது.
மதுரை வைகை காலனி மேற்கு பகுதியில் அமைந்துள்ள வைகை விநாயகர் ஆலயத்தில் காலை 10.30..மணிக்கு குருப்பெயர்ச்சி மகாயாகமும், பரிகார அர்ச்சணைகளும் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகி முத்துக்குமார், மணிமாறன் ஆகியோர் செய்து வருகின்றனர்.