திருச்செந்தூர் சூரசம்ஹாரம் கடற்கரை பகுதியில் நடைபெறாது, கோவில் பிரகாரத்தில் நடைபெறும்… பக்தர்கள் அனுமதி கிடையாது… என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெற இருக்கும் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் வருகின்ற 15.11.2020 முதல் 26.11.2020 ஆகிய 12 நாட்கள் நடைபெற இருக்கும் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு இன்று (12.11.2020) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் கோவில் வளாகத்தை சுற்றியுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். பின்னர் திருச்செந்தூர் சிவமுருகன் திருமண மண்டபத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசும்போது ஏற்கனவே கொரோனா தொற்றை கட்டுபடுத்துவதற்காக தமிழக அரசால் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் கந்த சஷ்டி திருவிழா வருகின்ற 15.11.2020 முதல் 26.11.2020 வரை 12 நாட்கள் நடைபெறும். இதில் 20.11.2020 அன்று சூரசம்ஹார நிகழ்வும், 21.11.2020 அன்று திருக்கல்யாணமும் முக்கியமான நிகழ்வுகளாகும்.
இந்த இரண்டு நாட்களுக்கும் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. இந்த வருடம் சூரசம்ஹார நிகழ்ச்சி கடற்கரையில் நடைபெறாது. கோயில் வளாகத்திற்குள் நடைபெறும்.
சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாணம் நடைபெறும் நாட்களை தவிர மற்ற நாட்களில் ஒரு நாளைக்கு 10000 பேர் வீதம் காலை 5.00 மணி முதல் இரவு 6.00 மணி வரை சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கபடுவர்.
கோவில் பிராகார பகுதியில் பக்தர்கள் விரதம் இருக்கவோ, அங்கபிரதட்சிணம் செய்யவோ மற்றும் தனியார் அமைப்புகளின் மூலம் அன்னதானம் வழங்குதல் போன்றவையோ தடை செய்யப் பட்டுள்ளது.
அதே போன்று இங்குள்ள விடுதிகள் மற்றும் மடங்களில் பேக்கேஜ் (ஒரு வார காலத்திற்கு) முறையில் புக் செய்து தங்குவதற்கு இந்த வருடம் தடைசெய்யப்பட்டுள்ளது.
20.11.2020 மற்றும் 21.11.2020 ஆகிய இரண்டு தினங்கள் எந்த விடுதியிலும் ஆட்கள் தங்குவதற்கு அனுமதி கிடையாது… அதற்கு விடுதி உரிமையாளர்கள் ஒத்தழைப்பு தரவேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது
20.11.2020 மற்றும் 21.11.2020 அன்று எல்லைகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு கோவில் வளாகத்திற்குள் யாரும் வராதபடி கண்காணிப்பை தீவிரபடுத்த சுமார் 1500 போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படுவர் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் திருச்செந்தூர் கோட்டாட்சியர் தனபிரியா, வட்டாட்சியர் முருகேசன் மற்றும் விடுதிகள் அசோசியேசன் தலைவர் அருள், செயலாளர் ரமணி உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
திருச்செந்தூர் உதவி காவல் கண்காணிப்பாளர்ஹர்ஷ் சிங், திருச்செந்தூர் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் முத்துராமன், கோவில் காவல் நிலைய ஆய்வாளர் ஞானசேகரன், குலசை காவல் நிலைய ஆய்வாளர் ராதிகா, ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளர் செல்வி உள்ளிட்ட காவல்துறையினர் உடனிருந்தனர்.
திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடைபெற உள்ள கந்தசஷ்டி விழாவிற்கு மேற்கொள்ளவுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த அரசாணை ஒன்றும் வெளியிடப் பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள அரசாணைக் குறிப்பு…