
மதுரையில், கேசவ சேவா கேந்திரம் சார்பாக சேவா விளக்க புத்தக வெளியீட்டு விழா 10.12.2020 காலை 11 மணியளவில் எஸ்.எஸ்.காலனியில் உள்ள கேசவ சேவா கேந்திர அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் கலந்து கொண்ட மதுரை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் தலைவர் பூஜனீய சுவாமி கமலாத்மானந்தர், விழாவில் ஆசியுரை வழங்கி பேசியபோது… ஸ்வாமி விவேகானந்தர் சிகாகோவில் பேசிய பிறகு உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் தரம் ஓங்கி நின்றது. நான் நினைத்தால் நாளைய தினமே சுதந்திரம் வாங்கி தர முடியும். ஆனால், அதை காப்பாற்றுவதற்கு சரியான ஆண் மகன் இல்லை என்று ஸ்வாமி விவேகானந்தர் கூறினார். அப்படிப்பட்ட ஆண் மகன்களை உருவாக்க வேண்டுமென்றால், நம்முடைய பண்பாடு, கலாச்சாரத்தை அவர்களுக்கு போதிக்க வேண்டும். ஹிந்துக்களுக்கு ஒற்றுமை தேவை… என்றார்.
இந்த நிகழ்ச்சியில், ஆர்.எஸ்.எஸ். மாநில அமைப்பாளர் கா.ஆறுமுகம் சிறப்புரை ஆற்றினார். அவர், கோவிட்-19 காலத்தில் ஆர்.எஸ்.எஸ். செய்த சேவைப்பணிகள் மற்றும் சேவைப் பணிகளில் ஈடுபட்டவர்கள் குறித்துப் பேசினார்.
நிகழ்ச்சியில், பூஜனீய ஸ்மானந்தர் (தத்வானந்த ஆஸ்ரமம்) மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் தீனதயாளன், ஆர்.எஸ்.எஸ்.மாவட்ட தலைவர் சந்திரன், மாவட்ட இணைத் தலைவர் முத்துப்பாண்டி, மாநில மக்கள் தொடர்பு துறை இணை செயலாலர் ஸ்ரீநிவாசன், கோட்ட அமைப்பாளர் முத்துக்குமார், கோட்ட இணைச் செயலாலர் சேகர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ்., குடும்ப அமைப்புகளைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.