மீண்டும் இணையும் நானும் ரவுடிதான் டீம் – வைரல் புகைப்படங்கள்

சினி நியூஸ் லைஃப் ஸ்டைல்

pooja

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, பார்த்திபன் உள்ளிட்ட பலரும் நடித்து ரசிகர்களை கவர்ந்த திரைப்படம் ‘நானும் ரவுடிதான்’. இப்படத்தின் படப்பிடிப்பின் போதுதான் நயனுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது.

இந்நிலையில், சில வருடங்களுக்கு பின் தற்போது இதே டீம் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணையவுள்ளது. இப்படத்திற்கு ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி தயாரிக்கவுள்ளார். விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடிக்கவுள்ளனர். இப்படத்தின் பூஜை இன்று நடந்தது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source: Vellithirai News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.