
விஜயவாடா கனகதுர்கா அம்மனுக்கு ஜகன் அரசாங்கம் அளித்த தங்க நகைகள். காணிக்கையின் மதிப்பு என்ன தெரியுமா?
சந்திரபாபு அரசாட்சியில் இடித்தலுக்கு ஆளான கோவில்களை புனரமைப்பு செய்வதற்கு முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் மாநில அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
கோவில்களின் புனரமைப்பு மற்றும் ஜீரணோத்தாரணத்திற்காக முகூர்த்தம் கூட முடிவு செய்தார்கள்.
வெள்ளிக்கிழமையே புனரமைப்பு பணிகளுக்கு ஒய்எஸ் ஜகன் மோகன் ரெட்டி அஸ்திவாரம் போட்டார்.
சென்ற அரசாங்கம் விஜயவாடாவில் இடித்த ஒன்பது ஆலயங்களின் புனரமைப்பு வேலைகளை தொடங்கி வைத்தார். காலை சரியாக 11.01 நிமிஷத்திற்கு சனைஸ்வரன் ஆலய புனரமைப்பு நடக்கவிருக்கும் இடத்தில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கல்வெட்டு வெளியிட்டார்.

அதன்பிறகு இந்திரகீலாத்ரி மலை மீதுள்ள துர்கா மல்லேஸ்வர சுவாமி கோவிலுக்கு தங்க நகைகளை அளித்தார். இதன் மதிப்பு ஆறரை லட்சம் ரூபாய்கள். ஆறரை இலட்சம் ரூபாய்கள் செலவில் கனக துர்கா தேவிக்கு மூன்று ஆபரணங்களை அறநிலையத்துறை அதிகாரிகள் செய்வித்தார்கள். வைரங்கள் பொதித்த மூக்குத்தி, பொட்டு, புல்லாக்கு ஆகியவை இவற்றில் உள்ளன. இவற்றின் எடை சுமார் 28.380 கிராம். வைரம் பதித்த நத்து ( மூக்குத்தி),
பொட்டு, புல்லாக்கு இவற்றை காணிக்கையாக அம்மனுக்கு சமர்ப்பித்தார்கள்.
மாநிலத்தில் கோவில்களும் கோவில் சிலைகளும் வரிசையாக தாக்குதலுக்கு உள்ளாகி வரும் நிலையில் ஜெகன் அரசாங்கம் இந்த முக்கியமான முடிவை எடுத்துள்ள விஷயம் குறிப்பிடத்தக்கது. சந்திரபாபு ஆட்சிக் காலத்தில் இடிக்கப்பட்ட 9 கோவில்களுக்கு புனரமைப்பு தொடங்கியது. புனரமைப்பு பணிகளை ஜெகன்மோகன் ரெட்டி அஸ்திவாரம் இட்டு தொடங்கிவைத்த செயலும் கூட முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இந்த வரிசையில் ராகு-கேது ஆலயம், சீதம்மா பாதாலு, தக்ஷிணமுக ஆஞ்சநேய சுவாமி கோவில், சனைஸ்வரர் ஆலயம், பொட்டு பொம்மை, துர்கை கோவில் படிக்கட்டு அருகில் மற்றுமொரு ஆஞ்சநேய ஸ்வாமி கோயில், சீதா ராம லக்ஷ்மண சமேத ஸ்ரீ தாசாஞ்சநேயர் கோவில், வீரபாகு கோவில், ஸ்ரீ வேணு கோபால கிருஷ்ணர் கோவில், கோசாலை ஆகியவற்றை புனரமைப்பு செய்ய உள்ளார்கள்.