
பணம் பங்கு பிரிப்பதில் தகராறு! பிச்சைக்காரர் கீழே தள்ளி கொலை!
மதுரை. டிச.11: பணம் பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் பிச்சைக்காரரை கீழே தள்ளி கொலை செய்த மற்றொரு பிச்சைக்காரரை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை திருப்பரங்குன்றம் கோவில் அருகே சரவணபொய்கை அருகே இரண்டு பிச்சைக்காரர்கள் கிடையே பணம் பங்கு போடுவதில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் மற்றொருவரை தாக்கி கீழே தள்ளினார். இதில் படுகாயமடைந்த அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் அங்கு சிகிச்சை பலனில்லாமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்துதிருப்பரங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்த போது இறந்தவர் கள்ளிக்குடி அருகே திருமால் புரத்தை சேர்ந்த காந்தன் 81 என்பது தெரியவந்தது இவரை தள்ளி கொலை செய்த மற்றொரு பிச்சைக்காரர் யார் என்று தெரியவில்லை அவரை தேடி வருகின்றனர்.
மாநகராட்சி பெண் ஊழியருக்கு செக்ஸ் தொல்லை சுகாதார ஆய்வாளர் மீது வழக்குப் பதிவு
மதுரை டிச.11: மாநகராட்சி ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த சுகாதார ஆய்வாளரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விளாங்குடி காரல்மார்க்ஸ் தெருவை சேர்ந்தவர் ஜெனிபர் அனிதா 31. இவர் கீழ வெளி வீதியில் உள்ள மாநகராட்சி வரிகள் வசூல் மையத்தில் ஒப்பந்தப் பணியாளராக பணியாற்றி வருகிறார். இந்த வார்டில் சுகாதார ஆய்வாளராக பணியாற்றி வருபவர் முருகன்.இவர் தொடர்ந்து ஜெனிபர் அனிதாவுக்கு டெக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்துள்ளார் .
பல முறை எச்சரித்தும் அவர் தன் பழக்கத்தை மாற்றிக் கொள்ளவில்லை .தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஜெனிபர் அனிதா விளக்குத்தூண் போலீசில் புகார் செய்தார். போலீசார் சுகாதார ஆய்வாளர் முருகன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையில் தனியார் நிறுவன கிளை மேலாளரிடம் மோசடிப் புகார் போலீசார் விசாரணை
மதுரை. டிச.11: மதுரையில் தனியார் நிறுவன கிளை மேலாளரிடம் மோசடி புகாரின் மீது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை நேதாஜி ரோட்டில் உள்ளஷு விற்பனை நிலையத்தின் மண்டல மேலாளர் வித்யாசாகர்.இவர் தல்லாகுளம் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார் .அந்த புகாரில் ஐயர் பங்களா புது நத்தம் ரோட்டில் உள்ள தங்களது கிளை நிறுவனத்தின் மேலாளராக இருந்து வந்தவர் உதயகுமார் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் சேர்ந்தவர்.
இவர் தங்கள் நிறுவனத்தில் விற்பனை செய்த பணம் ரூபாய் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 847 ஐகையாடல் செய்துவிட்டதாக புகாரில் தெரிவித்துள்ளார் .இந்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீசார் கிளை மேலாளர் உதயகுமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை தத்தநேரியில் 31 கிலோ கஞ்சாவுடன் 2 பேர் கைது
மதுரை. டிச.11: மதுரை தத்தனேரி பகுதியில் 31 கிலோ கஞ்சாவுடன் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை தத்தனேரி வைகை வடகரை பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக செல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்தை கண்காணித்தபோது கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்தது.
அவர்கள் அந்த பகுதியில் கஞ்சா விற்பனை செய்த சிம்மக்கல்லை சேர்ந்த குமார் என்ற சுட்டி குமார் 45 மற்றும் வடக்கு மாசி வீதியை சேர்ந்த கிருஷ்ணன் என்ற கேடி கிருஷ்ணன் 44 ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 37 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்