
மதுரை: உலக நன்மை கருதி பிரார்த்தனை செய்து, மதுரையில் உள்ள காஞ்சி பீடத்தில் வேதபாராயணம் நடைபெற்றது.
ஶ்ரீ காஞ்சி காமகோடி பீடம் மதுரை கிளையின் சார்பில் பெசன்ட் ரோடு சொக்கிகுளம் மடத்தில் உலக நன்மை கருதி காஞ்சி காமகோடி பீடாதிபதி ஶ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அனுகிரகத்தால், 16.11.2020 தொடங்கி, 30.12.2020 வரை தொடர்ந்து 45 நாட்கள் ரிக் யஜூர் சாம வேதங்கள் வேத விற்பன்னர்களால் தினமும் மாலை 5 மணி முதல் 6.30 மணி வரை நடத்தப்பட்டது. நிறைவுநாளான 30.12.2020 அன்று ஆசீர்வாத மந்த்ரங்களுடன் இந்த 45 நாள் வேத பாராயண நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
ஶ்ரீமடத்தின் மதுரை கிளைத் தலைவர் டாக்டர் டி ராமசுப்பிரமணியன், செயலாளர் ஏ பி சுந்தர், பொருளாளர் கே ஶ்ரீ குமார், துணைத் தலைவர் சுப்பிரமணியன், இணைச் செயலாளர் ஶ்ரீவத்ஸன் வெங்கட ரமணி , புரவலர்கள் கணபதி சர்மா ஷ்யாம் , ராதாகிருஷ்ணன் , ஶ்ரீனிவாசன் சங்கர ராம் ஶ்ரீராம் அஸ்வின் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.