
அவனியாபுரத்தில் பட்டபகலில் பெண்ணிடம் செயின் பறிப்பு!
மதுரை டீசர் 30 அவனியாபுரத்தில் நடந்து சென்ற பெண்ணிடம் பட்டபகலில் செயின் பறித்த மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.
அவனியாபுரம் விவேகானந்தர் தெருவை சேர்ந்தவர் கோபிகிருஷ்ணன் மனைவி தேவி 26 இவர் நேற்று மதியம் மீனாட்சி நகர் பகுதியில் நடந்து சென்றபோது மர்ம ஆசாமிகள் அவரை வழிமறித்து மிரட்டி அவர் அணிந்திருந்த இரண்டரைபவுன்மோதிரம் மற்றும்செயினை பறித்துச் சென்றுவிட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தேவி அவனியாபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து செயின் பறித்த ஆசாமியை தேடி வருகின்றனர்.
கீரைத்துறையில் கொள்ளை முயற்சியில் ஆட்டோவில் பதுங்கியிருந்த 2 பேர் கைது
மதுரை: ஆட்டோவில் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர்.
கீரைத்துறை சிந்தாமணி ரோடு பழைய செக்போஸ்ட் அருகே சந்தேகப்படும்படியாக ஆட்டோவில் சிலர் பதுங்கி இருப்பதாக கீரைத்துறைபோலீசாருக்கு தகவல் கிடைத்தது சப்-இன்ஸ்பெக்டர் துரைப்பாண்டி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆட்டோவை சுற்றி வளைத்து ஆட்டோவில் இருந்தவர்கள் அனுப்பானடி வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த முத்துராமலிங்கம் மகன்மாதவன் 21 கீரத்துரை மூக்க நாடார் சந்து பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் ஆனந்து 20 இவர்கள் இரண்டு பேரையும் கைது செய்தனர் .
அவர்களுடன் இருந்த முத்திருளாண்டிமற்றும் ஒருவர் தப்பி ஓடிவிட்டனர் போலீசார் ஆட்டோவை பறிமுதல் செய்து சோதனை நடத்தியபோது ஆட்டோவில் பெரியவாள்ஒன்றும் ககத்தியும் இருந்தது .அவைகளையும் போலீசார்கைப்பற்றினர்.
நோய்வாய்ப்பட்ட மகனால் மனமுடைந்து தந்தை தற்கொலை
மதுரை: மகன் நோய்வாய்ப்பட்டதால்மனமுடைந்த தந்தை தற்கொலை செய்து கொண்டார்.
திருப்பரங்குன்றம் ஆர்வி பட்டியை சேர்ந்தவர் செல்வகுமார் 56 இவரது மகன் மன நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.இதற்கான சிகிச்சை அளித்தும் அவருக்கு குணமடையவில்லை .
இதனால் மனமுடைந்து காணப்பட்ட செல்வகுமார் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக திருநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சளி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 8 வயது சிறுவன் மரணம்!
மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் சளி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 8 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
மதுரை ஜெய்ஹிந்த்புரம்சோலை அழகுபுரம் முதல் தெருவை சேர்ந்தவர் லட்சுமணன் அவரது 8 வயது மகன் கௌதம்.இவருக்கு சளி மற்றும் காய்ச்சல் இருந்தது காலில் காயமும்ஏற்பட்டிருந்தது .இந்த நிலையில் அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து பின்னர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் .
ஆனால் சிகிச்சை பலன் இல்லாமல் சிறுவன் கவுதம் பரிதாபமாக உயிர் இழந்தார் இந்த சம்பவம் தொடர்பாக ஜெய்ஹிந்துபுரம்போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.