மதுரை வீதிகளில் முற்றிலும் பெண்களே இழுத்த அஷ்டமி சப்பரம் வலம் வந்தது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் எட்டு மாதங்களுக்குப் பிறகு வெளி வீதிகளில் முற்றிலும் பெண்களே இழுத்த அஷ்டமி சப்பரத்தில் மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் உடன் வலம் வந்தனர்.
ஊரடங்கு காரணமாக சித்திரை திருவிழா உள்ளிட்ட மீனாட்சி கோவில் திருவிழாக்களில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு காரணமாக அஷ்டமி சப்பரம் வலம்வர மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது.
இதனையடுத்து இன்று காலை 5 மணிக்கு கோயிலில் இருந்து மீனாட்சி சுந்தரேஸ்வரர் சப்பரங்கள் புறப்பாடாகி யானைக்கல் 4 வெளி வீதிகள், நாயக்கர் புது தெரு, வக்கீல் புது தெரு, கீழமாரட் வீதி, விளக்குத்தூண், வழியாக கீழமாசி வீதி தேரடி வந்து சேர்ந்தது.
முற்றிலும் பெண்களே இந்த அஷ்டமி சப்பரத்தை இழுத்த னர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், நிர்வாக அதிகாரி செல்லத்துரை, ஆகியோர் தலைமையில் ஊழியர்களும், திருக்கோவில் தொண்டர்களும் செய்திருந்தனர்.
மதுரையில் தேய்பிறை அஷ்டமியையொட்டி, மாசி வீதிகளில் பவனி வரும் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய பஞ்ச மூர்த்திகள்.…