
- ஆந்திராவில் பரபரப்பு.
- மேலும் ஒரு ஹிந்து ஆலயத்தின் மீது தாக்குதல்.
- விளக்கமளித்த போலீசார்.
ஆந்திரப் பிரதேசத்தில் மேலும் ஒரு ஹிந்து கோவில் மீது தாக்குதல் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒவ்வொரு நாளும் மாநிலத்தில் ஏதோ ஓர் இடத்தில் கோவில்களின் மீது தாக்குதல் நடந்த சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்து கொண்டே உள்ளன.
ஆந்திரப் பிரதேசத்தில் ராமதீர்த்தம் சம்பவம் மறந்து போவதற்கு முன்பே மற்றுமொரு கோவில் மீது தாக்குதல் நடந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதிதாக பிரகாசம் மாவட்டத்தில் சிங்கராயர்கொண்ட மண்டலத்திலுள்ள பழைய சிங்கராயர்கொண்ட (மலை) கிராமத்தில் தட்சிண சிம்ஹாசலமாக பெயர் பெற்ற வராக லட்சுமி நரசிம்ம ஸ்வாமி கோவில் முகத்துவாரம் மீதுள்ள விக்ரகங்கள் சிதைக்கப்பட்டுள்ளன. முகத்துவாரத்தின் மேல் பகுதியில் உள்ள லக்ஷ்மி நரசிம்ம ஸ்வாமி, ராஜலக்ஷ்மி, கருடன் சிலைகளின் கைகள் உடைந்து போயுள்ளன.
காலையில் விக்கிரகங்கள் மீது தாக்குதல் நடந்துள்ளதை கவனித்த உள்ளூர் மக்கள் போலீசாருக்கு செய்தி தெரிவித்தார்கள். காலையில் விக்ரகங்கள் சேதமடைந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்த உடனே பக்தர்கள் மிக அதிக அளவில் அங்கு வந்து சேர்ந்தார்கள். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கடினமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள்.
ஆனால் போலீசார் ஆலய முகப்பை பரிசீலித்து எப்படிப்பட்ட தாக்குதலும் நடக்கவில்லை என்று முடிவெடுத்தார்கள். முகப்பில் சிற்பங்கள் வடிவமைத்து மிக அதிக காலம் ஆனதால் சிமெண்ட் உதிர்ந்து விட்டது என்பதாக விளக்கமளித்தார்கள். விக்ரகங்களை சேதப்படுத்தி விட்டார்கள் என்று கூறி பொய் பிரச்சாரம் செய்தால் கடும் நடவடிக்கை எடுப்போம் என்று எச்சரித்தார்கள்.
அண்மையில் இதுபோன்ற சம்பவமே கர்னூல் மாவட்டத்தில் இடம்பெற்றது. கர்னூல் மாவட்டம் கொசிகி மண்டலம் மர்லபண்டாவிலுள்ள ஆஞ்சநேய ஸ்வாமி கோவிலில் சீதா ராமர் சிலைகள் தாக்கப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. கோவில் கோபுரத்தின் மீது உள்ள விக்கிரகத்தை அடையாளம் தெரியாத நபர்கள் சேதப்படுத்தி உள்ளார்கள் என்ற செய்தி பரவியது. இந்த விவகாரத்திலும் கூட மாவட்ட போலீசார் விவரம் அளித்தார்கள்.
ராம தீர்த்தம் விவகாரம் ஏற்படுத்திய தீவிரமான பரிணாமத்தின் பின்னணியில் மிகவும் எச்சரிக்கையடைந்த போலீசார் பரபரப்பாக சம்பவ இடத்திற்கு வந்து பரிசீலனை செய்து அப்படிப்பட்ட சம்பவம் எதுவும் நடக்கவில்லை என்று கூறினார்கள். கோவிலின் மீது தாக்குதல் போன்ற அம்சங்கள் பக்தர்களின் மனநிலையை பாதிக்கும் என்றும், சம்பவம் குறித்து நன்கு தெளிவான பின்பு மட்டுமே அவற்றைக் குறித்து பேச வேண்டும் என்றும் போலீசார் எச்சரித்தார்கள். பொய் பிரசாரங்களை நம்பி மன உளைச்சலுக்கு பக்தர்கள் ஆளாக வேண்டாம் என்று குறிப்பிட்டார்கள்.
மறுபுறம் ராம தீர்த்தம் சம்பவத்தில் சிஐடி விசாரணை நடந்து வருகிறது. சேதப்படுத்தியவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். அதோடு கோவிலை புனருத்தாரணம் செய்வது பற்றியும் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது. கோதண்ட ராமரின் விக்ரஹத்தை பிரதிஷ்டை செய்வது குறித்து அறநிலையத்துறை அமைச்சர் பெல்லம்பள்ளி ஸ்ரீநிவாஸ் அர்ச்சகர்களோடும் பண்டிதர்களோடும் பேச்சுவார்த்தை நடத்தினார். கோவிலை நவீனப்படுத்துவதோடு கூட ஒரே மாதத்தில் ராமர் விக்கிரகத்தை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.
ஆனால் ராமர் கோவிலில் நடந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது என்றும் இதன் பின்னால் யார் இருக்கிறார்கள் என்ற கோணத்தில் பரிசீலித்து வருவதாகவும் சதித்திட்டம் இருக்கலாம் என்றும் அவர் சந்தேகம் தெரிவித்தார்.
ராம தீர்த்தம் குறித்து அரசியல் செய்ய வேண்டாம் என்று எதிர்க்கட்சிகளுக்கு அமைச்சர் பெல்லம்பள்ளி தெரிவித்தார். குற்றவாளிகளை இரண்டு நாட்களுக்குள் பிடித்து கடுமையான தண்டனை விதிப்போம் என்று அவர் தெளிவுபடுத்தினார்.