மதுரை கட்டுமான நிறுவனங்களில் சோதனை- ரூ.165 கோடி ,14 கிலோ தங்கம் பறிமுதல்…

images 100 - 2026
images 2022 07 24T084824.637 - 2026

மதுரையில் தனியார் கட்டுமான நிறுவனங்களில் நடந்த வருமானவரி சோதனையில் ரூ.165 கோடி ரொக்கம், 14 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது .

மதுரையை தலைமையிடமாக கொண்டு ஜெயபாரத், அன்னை பாரத் மற்றும் கிளாட்வே சிட்டி ஆகிய தனியார் கட்டுமான நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களில் கடந்த பல வருடங்களாக வருமானத்துக்கு உரிய வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக சென்னையில் உள்ள வருமானவரி புலனாய்வு பிரிவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த சில நாட்களாக அந்த நிறுவனம் சம்பந்தப்பட்ட இடங்களில் சோதனை நடந்து வந்தது. நேற்று 4-வது நாளாக சோதனை நடந்து முடிந்தது. அவனியாபுரம் பாலு என்பவரின் மகன்கள் அழகர், வக்கீல் முருகன், கிளாட்வே ஹவுசிங் என்ஜினீயர் ஜெயக்குமார், ஜெயபாரத் ஹவுசிங் சரவணக்குமார், அன்னை பாரத் செந்தில் குமார் அவரது தம்பி, 3 மகள்கள் ஆகியோரது வீடுகளிலும், இந்த நிறுவனங்களின் அலுவலகங்களில் நடந்து வந்த சோதனையில் மேற்கண்ட நகை, பணம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன.

இந்த நிறுவனங்களின் அலுவலகங்கள், பங்குதாரர்களின் வீடுகள் அவனியாபுரம், வில்லாபுரம், திருப்பாலை, திருப்புவனம் ஆகிய இடங்களில் உள்ளன. சம்பந்தப்பட்ட அனைத்து இடங்களிலும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி உள்ளனர்.

இந்த நிலையில், கடந்த 4 நாட்களாக விடிய விடிய நடந்த இந்த சோதனையில், முருகன் என்பவரது வீட்டில் இருந்து ரூ.75 கோடி ரொக்கம், 3 கிலோ 200 கிராம் தங்கம், ரூ.93 கோடி மதிப்பிலான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளதாகவும், செந்தில்குமார் வீட்டில் இருந்து 2 கிலோ 700 கிராம் தங்கம், ரூ.1 கோடியே 96 லட்சம் மதிப்பிலான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவித்தனர். மேலும், சரவணக்குமார் வீட்டில் இருந்து 3½ கிலோ தங்கம், வைரம், ரொக்கம் மற்றும் ஆவணங்களும், அழகர் வீட்டில் இருந்து ரூ.90 கோடி ரொக்கம், ரூ.130 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள், ஜெயக்குமாரின் கோச்சடை வீட்டில் இருந்து 4 கிலோ தங்கம், ரொக்கப்பணம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளதாகவும் வருமானவரி அதிகாரிகள் தெரிவித்தனர்.

வருமானவரித்துறையினரின் 4 நாள் சோதனையில் ஜெயபாரத் குழும நிறுவனங்களின் பங்குதாரர்களின் வீட்டில் இருந்து மொத்தம் 14 கிலோ தங்கம், ரூ.165 கோடி ரொக்கப்பணம், ரூ.150 கோடி மதிப்பிலான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு இருப்பதாகவும் அதிகாரிகள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

Topics

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

Entertainment News

Popular Categories