மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பெயரில் மோசடி..

images 49 - 2026

ரூ1000 செலுத்தினால் மதுரை மீனாட்சியம்மன் கோவில் குங்குமம் அனுப்பி வைக்கப்படும் என போலியான விளம்பரங்கள் செய்து பணம் ‌வசூலித்த தனியார் அறக்கட்டளை மீது பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

மதுரை மீனாட்சியம்மன் கோவில் பெயரில் போலி இணையதளம் தொடங்கி, ரூ.1000 அனுப்பினால் அம்மனின் குங்குமம் வீட்டு முகவரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என விளம்பரம் செய்து மோசடி செய்தாக டிரஸ்ட் உரிமையாளர்கள் மீது போலீசார் வழக்‍குப்பதிவு செய்துள்ளனர்.

உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நாள்தோறும் உள்ளூர் மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். மீனாட்சி அம்மன் கோவிலில் அம்மனின் குங்குமம் பிரசாதம் மிகவும் சிறப்பு பெற்றதாகும். 

குங்குமம் நம் மரபில் மங்கலச் சின்னத்தின் அடையாளமாகக் கருதப்படுவது. பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் அணிந்துகொள்ள விரும்புவார்கள். அதுவும் கோயில்களில் அம்மன் சந்நிதியில் தரும் குங்குமம் என்றால் இன்னும் விசேஷமே. திருநீறு அணிபவர்களும் குங்குமம் அணிந்து கொண்டால் செயல்கள் அனைத்தும் வெற்றியாகும் என்கின்றன ஞானநூல்கள். குங்குமங்களில் பலதரப்பட்ட குங்குமங்கள் காணப்பட்டாலும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில், சென்னை காளிகாம்பாள் கோயில் ஆகியவற்றில் வழங்கப்படும் தாழம்பூ குங்குமம் மிகவும் சிறப்புடையதாகக் கருதப்படுகிறது. பக்தர்கள் அந்தக் குங்குமத்தை வைத்துக்கொண்டாலும் வீட்டுக்கு எடுத்துச் சென்றாலும் விசேஷம் என்கிறார்கள். தாழம்பூ குங்குமத்தில் சிறப்பு அதிகம் உள்ளது முக்கிய அம்சமாகும்.

இந்நிலையில், கடச்சனேந்தல் பகுதியில் செயல்பட்டு வரும் காவேரி சேவா டிரஸ்ட் எனும் அமைப்பு, ரூ.1000 டிரஸ்ட் வங்கிக் கணக்‍கிற்கு அனுப்பினால் மாதந்தோறும் முதல் வாரத்தில் சிறப்பு பூஜை செய்யப்பட்ட குங்கும் வீட்டின் முகவரிக்கு அனுப்பி வைக்‍கப்படும் என மீனாட்சி அம்மன் கோவில் பெயரில் மோசடியான விளம்பரத்தை பதிவு செய்தனர். 

இதனை நம்பி ஏராளமான வெளிநாட்டு பக்‍தர்கள் டிரஸ் பெயரில் ரூ.1000 செலுத்தியதாக மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்தது.

இதனையடுத்து மீனாட்சி அம்மன் கோவில் கண்காணிப்பாளர் அளித்த புகாரின் அடிப்படையில், காவேரி சேவா டிரஸ்ட் உரிமையாளர்கள் மீது மீனாட்சி அம்மன் கோவில் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மீனாட்சி அம்மன் கோவில் பெயரில் நடைபெற்ற மோசடி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories