
ரெயில்வே வாரியத்தின் புதிய தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக அனில் குமார் லஹோட்டி பொறுப்பேற்றுள்ளார் . இவர் பொறுப்பேற்ற பின்னராவது புதிய வழித்தடங்களில் ரயில்கள் அதிகளவில் இயக்கப்படுமா என தமிழக கேரளா ரயில் பயணிகள் ஆவலுடன் புத்தாண்டு எதிர்பார்ப்பாக காத்திருக்கின்றனர்.
ரெயில்வே வாரியத்தின் புதிய தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக அனில் குமார் லஹோட்டி பொறுப்பேற்றுள்ளார்.இந்த நியமனத்துக்கு அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு முன், லஹோடி ரெயில்வே வாரியத்தின் உறுப்பினராக (உள்கட்டமைப்பு) பணியாற்றினார். ரெயில்வேயில் தனது 36 ஆண்டுகளுக்கும் மேலான பணியில், மத்திய, வடக்கு, வட மத்திய, மேற்கு மற்றும் மேற்கு மத்திய ரெயில்வே மற்றும் ரெயில்வே வாரியத்தில் பல்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளார்.லஹோடி முன்பு மத்திய ரெயில்வேயின் பொது மேலாளராகப் பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரெயில்வே வாரியத்தின் புதிய தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக அனில் குமார் லஹோட்டி பொறுப்பேற்றுள்ளதை தமிழகத்தில் தென்மாவட்ட மக்கள் மற்றும் கேரளா ரயில் பயணிகள் வரவேற்றுள்ளனர்.
இவராவது புதிய வழித்தடங்களில் ரயில்கள் இயக்கவும் நீண்ட காலமாக சிறப்பு ரயிலாக இயங்கும் திருநெல்வேலி -மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி, எர்ணாகுளம்- வேளாங்கண்ணி -எர்ணாகுளம், திருநெல்வேலி -தாம்பரம்-திருநெல்வேலி , சிறப்பு ரயில்களை தினசரி நிரந்தர ரயில்களாக இயக்கவும்,கோவை-பொள்ளாச்சி-ராஜபாளையம்-கொல்லம் வழித்தடத்தில், எர்ணாகுளம் -செங்கோட்டை -தாம்பரம் உட்பட பயணிகள் அதிகம் பயணிக்கும் வழித்தடங்களில் ரயில்கள் இயக்கவும் எதிர்பார்க்கின்றனர்.





