மதுரை- பிப்ரவரி 8-ந் தேதி வரை சில ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம்..

1012308 chennai 16 1 - 2026

மதுரையில் இரட்டை ரெயில்வே பாதை இணைப்பு மற்றும் தண்டவாள பராமரிப்பு பணி நடந்து வருவதால் இன்று முதல் பிப்ரவரி 8-ந் தேதி வரை சில ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

இரட்டை ரயில் பாதை இணைப்பு பணிகளுக்காகவும் ரயில் போக்குவரத்தில் மாற்றம் போன்ற காரணங்களுக்காகவும் பயணிகளின் வசதிக்காக ரயில்களின் வேகத்தை அதிகரிக்கவும், புதிய ரயில் இயக்கவும் மதுரை ரயில் நிலையத்தில் இரட்டை இரயில் பாதை இணைப்பு பணிகள் நடைபெற இருக்கின்றன. இதன் காலமாக ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி திருச்செந்தூர்-பாலக்காடு, மதுரை-ராமேசுவரம் ரெயில்கள் இரு மார்க்கங்களிலும் முற்றிலுமாக ரத்து செய்யப்படுகிறது. பாலக்காடு-திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் இன்று மட்டும் திண்டுக்கல் வரை இயக்கப்படும். திருவனந்தபுரம்-மதுரை அமிர்தா எக்ஸ்பிரஸ் நாளை ( 7-ந் தேதி) கூடல் நகர் வரை மட்டும் செல்லும். மதுரை-திருவனந்தபுரம் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில் 6,7,8-ந் தேதிகளில் கூடல் நகரில் இருந்து இயக்கப்படும். நாகர்கோவில்-கோவை எக்ஸ்பிரஸ் இரு மார்க்கங்களிலும் விருதுநகர் வரை மட்டும் இயக்கப்படும்.

மதுரை-செங்கோட்டை முன்பதிவற்ற பயணிகள் ரெயில், இரு மார்க்கங்களிலும் விருதுநகர் வரை மட்டும் செல்லும். விழுப்புரம்-மதுரை ரெயில் இரு மாருகங்களிலும் திண்டுக்கல் வரை மட்டும் செல்லும். மதுரை-கோவை ரெயில் இரு மார்க்கங்களிலும் திண்டுக்கல் வரை மட்டும் இயக்கப்படும்.

புனலூர்-மதுரை எக்ஸ்பிரஸ் இரு மார்க்கங்களிலும் 7-ந் தேதி நெல்லை வரை மட்டும் இயக்கப்படும். சென்னை சென்ட்ரல்-மதுரை எக்ஸ்பிரஸ் ரெயில், நாளை (7-ந் தேதி) ஒரு நாள் மட்டும் இரு மார்க்கங்களிலும் திண்டுக்கல் வரை இயக்கப்படும். குருவாயூர்-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்றும், நாளையும் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி வழியாக திருச்சி செல்லும். இந்த ரெயில் மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, பட்டுக்கோட்டையில் நின்று செல்லும்.

நாகர்கோவில்-மும்பை எக்ஸ்பிரஸ் 8-ந் தேதி வரை விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி, கரூர் வழியாக செல்லும். இந்த ரெயில் மானாமதுரையில் மட்டும் நின்று செல்லும். கன்னியாகுமரி-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் இரு மார்க்கங்களிலும் நாளை (7-ந் தேதி) விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை வழியாக செல்லும்.

ராமேசுவரம்-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் இன்று (6-ந் தேதி) மற்றும் 8-ந் தேதி மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர் வழியாக செல்லும். தேனியில் இருந்து மதுரை வரும் பயணிகள் சிறப்பு ரெயில், 30 நிமிடம் தாமதமாக மாலை 6.45 மணிக்கு வரும். திருச்சி பயணிகள் ரெயில், 30 நிமிடம் தாமதமாக மானாமதுரைக்கு வரும். மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories