மகாசிவராத்திரி பூ விலை அதிகரிப்பு..

images 2023 02 18T143521.641 - 2026

இந்துக்களின் பண்டிகைகளில் முக்கியத்துவம் பெற்ற மகாசிவராத்திரி இன்று புஷ்பங்களோடு கொண்டாடப்படுகிறது.இதனால் தென்மாவட்ட பூ சந்தையில் பிரபலமான மதுரை , நாகர்கோவில் தோவாளை பூ மார்க்கெட்டில் வரலாற்றில் முதல் முறையாக ஒரு தாமரைப்பூ 50 ரூபாய்க்கு விற்பனையானது.சிவராத்திரியொட்டி பூக்களின் வரத்தும் அதிகமாக இருந்தது. மதுரை மாட்டுத்தாவணி, நாகர்கோவில் தோவாளை மலர் சந்தையில் பூக்களை வாங்க ஏராளமானோர் குவிந்தனர்.

images 2023 02 18T143453.246 - 2026

இந்துக்களின் பண்டிகைகளில் முக்கியத்துவம் பெற்ற மகாசிவராத்திரி இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சிவன் கோவில்களில் ஏராளமான பக்தர்கள் விடிய விடிய இருந்து சாமி தரிசனம் செய்வார்கள்.சிறப்பு பூஜையில் சுவாமிக்கு மலர் அபிஷேகம் செய்யப்படுவது வழக்கம். இதற்காக பூக்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. மதுரை மாட்டுத்தாவணியில் மலர் சந்தையில் பூக்களை வாங்க ஏராளமானோர் குவிந்தனர்.

இன்று சிவராத்திரியொட்டி பூக்களின் வரத்தும் அதிகமாக இருந்தது. மல்லிகை கிலோ பூ 1500 முதல் 2500 ரூபாய் வரை விற்கப்பட்டது. பிச்சி ரூ. 1,500, முல்லை ரூ. 1500, செவ்வந்தி ரூ. 200, சம்பங்கி ரூ. 300, செண்டுமல்லி ரூ. 150-க்கும் விற்பனை செய்யப்பட்டது. மலர் சந்தையில் தாமரை பூக்கள் வழக்கமாக 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை விற்கப்படுவது வழக்கம்.

ஆனால் இன்று மதுரை பூ மார்க்கெட்டில் வரலாற்றில் முதல் முறையாக ஒரு தாமரைப்பூ 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனையும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.

1147346 thamari 1 - 2026

நாகர்கோவில் அருகே தோவாளையில் பிரசித்தி பெற்ற பூ மார்க்கெட் உள்ளது. இங்கு கேரளா,நெல்லை தென்காசி குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் கொண்டு வரப்படுகின்றன. மேலும், நெல்லை, மதுரை போன்ற பிற மாவட்டங்களில் இருந்தும் லாரி, டெம்போ மூலம் பூக்கள் வருகின்றன. தினமும் அதிகாலையிலேயே பூக்கள் விற்பனைக்காக வருவதால், அவற்றை வாங்கி செல்ல நெல்லை தென்காசி குமரி மற்றும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வந்து வாங்கிச் செல்கின்றனர். மார்க்கெட்டில் ஒரு கிலோ ரூ.1,200-க்கு விற்பனையான பிச்சி நேற்று ரூ.450 முதல்ரூ 650உயர்ந்து ரூ.1,850-க்கு விற்பனையானது. இதேபோல் ஒரு கிலோ முல்லை ரூ.1000-ல் இருந்து ரூ.500 உயர்ந்து ரூ.1500-க்கும், தாமரை ஒரு பூ ரூ.40-க்கும் விற்பனையானது.

அரளி ரூ.300, மல்லிகை ரூ.800, சம்பங்கி ரூ.200, கனகாம்பரம் ரூ.400, வாடாமல்லி ரூ.60, துளசி ரூ.40, தாமரை (ஒரு எண்ணம்) ரூ.40, கோழிப்பூ ரூ.30, பச்சை ஒரு கட்டு ரூ.10, ரோஸ் பாக்கெட் ரூ.25, பட்டன் ரோஸ் ரூ.160, ஸ்டெம்பு ரோஸ் (ஒரு கட்டு) ரூ.250, மஞ்சள் கேந்தி ரூ.80, சிவப்புக்கேந்தி ரூ.85, சிவந்தி மஞ்சள் ரூ.150, சிவந்தி வெள்ளை ரூ.170, கொழுந்து ரூ.100, மருக்கொழுந்து ரூ.130 என விற்பனையானது.

இதுகுறித்து பூவியாபாரிகள் கூறுகையில், “தற்போது பனி அதிகமாக பெய்து வருவதால் பூக்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக மார்க்கெட்டுக்கு பிச்சிப்பூ 2 டன் வரும். ஆனால் இன்று 500 கிலோ மட்டுமே வந்தது. தாமரை 10 முதல் 15 ஆயிரம் பூக்கள் வரும். ஆனால் உற்பத்தி குறைவால் 200 பூக்கள் வந்தன. இன்று சிவராத்திரி என்பதால் பூக்கள் தேவை அதிகமாக இருந்தது. இதனால், வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கிச் சென்றதால் விலை உயர்ந்து காணப்பட்டது” என்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories