மதுரை மாவட்டத்தில், ஆடிப்பூர விழா கோவில்களில் கொண்டாடப் பட்டது.
மதுரை அண்ணா நகர், தாசில்தார் நகர் சித்தி விநாயகர் ஆலயம், வர சித்தி விநாயகர் ஆலயம், சௌபாக்கிய விநாயகர் கோவில், கோமதிபுரம் ஞான சித்தி விநாயகர் ஆலயம், மதுரை அண்ணா நகர் சர்வேஸ்வர ஆலயம் ,வைகை காலனி வைகை விநாயக ஆலயம், மதுரை யானைக் குழாய் முத்து மாரியம்மன் ஆலயம் ஆகிய கோயில்களில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு, துர்க்கை, மீனாட்சி, மகாலட்சுமி, வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, வளைகாப்பு உற்சவம் நடைபெற்றது.
இதில், ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு, அம்பிகை வழிபட்டனர். இதை அடுத்து, கோயில் நிர்வாகம் சார்பில், பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், ஆன்மீக பக்தர் குழுவினர் செய்திருந்தனர்.