தென்கரை அகிலாண்டேஸ்வரி ஆலய மகா கும்பாபிஷேகம்.
சோழவந்தான் அருகே தென்கரை கிராமத்தில் வரலாற்று சிறப்புமிக்க, மிகவும் பழமை வாய்ந்த பல்வேறு நன்மைகள் கிடைக்கக்கூடிய அகிலாண்டேஸ்வரி அம்மன் சமேத மூலநாத சுவாமி கோவிலில் திருப்பணி வேலைகள் நிறைவு பெற்று இதற்கான மகா கும்பாபிஷேகம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7.25 மணி அளவில் நடைபெற்றது.
இதற்கான பூஜை கடந்த 10ம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து கோ பூஜை தொடங்கி முதல் கால யாக பூஜை, இரண்டாம் காலயாக பூஜை, மூன்றாம் காலையாக பூஜை நடைபெற்று இன்று அதிகாலை நான்காம் காலயாகபூஜை நடைபெறுகிறது.
இதைத் தொடர்ந்து மகா பூர்ணாஹதி நடந்தது சிவாச்சாரியார்கள் புனிதநீர் குடங்களை எடுத்து கோவிலை வந்து சுவாமி மற்றும் அம்பாள் உட்பட கோவில் உள்ள கோபுர கலசங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து அகிலாண்டேஸ்வரி உட்பட இங்குள்ள தெய்வங்களுக்கு மகா அபிஷேகம்,சிறப்பு அர்ச்சனை, சிறப்பு பூஜை, பிரசாதம் வழங்கப்பட்டது. மதுரை ஆதித்யா நிறுவன தலைவர் செந்தில் தலைமையில் ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களுக்கு அன்னதான வழங்கப்பட்டது.
கும்பாபிஷே விழாவில் இந்து அறநிலை ஆட்சித்துறை உதவி ஆணையாளர் வளர்மதி, கோவில் செயல் அலுவலர் கார்த்திகைச் செல்வி, ஊராட்சி
மன்றத் தலைவர் மஞ்சுளா ஐயப்பன், உதவி தலைவர் கிருஷ்ணன், ஊராட்சி செயலாளர் முனியராஜ், கிராம நிர்வாக அலுவலர் ஜெகதீஷ், கோவில் பணியாளர்கள் நாகராஜ், மணி, நித்யா ,ஜனார்த்தன் உள்பட தென்கரை மற்றும் இப்பகுதியில் உள்ள கிராமமக்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
இன்று மாலை 6:30 மணியளவில் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இரவு பஞ்ச மூர்த்திகள் திரு வீதி உலா நடைபெற இருக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், திருப்பணி குழுவினர், கிராம பொதுமக்கள், கோவில் பணியாளர்கள் ஆகியோர் செய்து இருந்தனர்.
தென்கரை ஊராட்சி சுகாதார ஏற்பாடு மற்றும் குடிநீர் வசதி, கூடுதலான திருவிளக்கு ஏற்பாடு செய்தனர். சோழவந்த இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார், காடுபட்டி சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் உட்பட போலீசார், சோழவந்தான் தீயணைப்பு நிலைய போக்குவரத்து அலுவலர் கண்ணன் தலைமையில் காவலர்கள், திருவேடகம் விவேகானந்த கல்லூரி என்.சி.சி மாணவர்கள் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு பட்டிருந்தனர்.
அழகி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்.
மதுரை மாவட்டம், பாலமேடு தேவேந்திரகுல வேளாளர் கிழக்குத் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ தொட்டிச்சி சோலை அழகி அம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, இவ்விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பூஜை பொருட்களும் அன்னதானமும் வழங்கப்
பட்டது. விழா ஏற்பாடுகளை, பாலமேடு தேவேந்திர குல வேளாளர் பங்காளிகள் செய்து இருந்தனர்.
லட்சுமிஹயக்ரீவருக்கு சிறப்பு பூஜை
மதுரை அண்ணாநகர், வைகை காலனியில் உள்ள வைகை விநாயகர் ஆலயத்தில் உள்ள வைகை விநாயகர் ஆலயத்தில், திருவோண நட்சத்திரத்தை யொட்டி, லட்சுமி ஹயக்ரீவருக்கு, சிறப்பு அபிஷேக, அர்ச்சணைகள் நடைபெற்றது. இதையடுத்து, பக்தர்களுக்கு சிறப்பு அர்ச்சணைகளை அர்ச்சகர் காந்தன் செய்தார். இதன் ஏற்பாடுகளை, ஆலய நிர்வாகி முத்துக்குமார்,மணிமாறன் ஆகியோர் செய்திருந்தனர்.