சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
மதுரை அருகே சோழவந்தான் அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோவில், பௌர்ணமி செவ்வாய் மற்றும் புரட்டாசி மாத பிறப்பை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. திருவிளக்கு பூஜையில், சோழவந்தான் பகுதியில் இருந்து ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் எனண்ணெய் திரி உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது.
திருவிளக்கு பூஜையில், கலந்துகொண்ட பெண்கள் நேர்த்திக்கடன் நிறை
வேற அம்மன் பாடல்கள் பாடி வேண்டிக்கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஆன்மீக பக்தர்கள் குழுவினர் செய்திருந்தனர்.
வாடிப்பட்டியில் வல்லப கணபதி கோயிலில் சிறப்பு பூஜை
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வல்லப கணபதி கோவிலில், வாடிப்பட்டி வடக்கு மண்டல் சார்பாக பாரத பிரதமர் மோடி பிறந்த நாள் விழா வையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனை அர்ச்சனைகளுடன், சிறப்பு பூஜைசெய்து பொங்கல் வழங்கப்பட்டது.
இந்த சிறப்பு பூஜையில் மண்டல் தலைவர் சேது ராமன், மாவட்டப் பொருளாளர் முத்து ராமன், மதுரை மாவட்ட வழக்கறி ஞர் பிரிவு மாவட்ட துணைத் தலை வர் கார்த்திகேயன், ஓபிசி அணி மாவட்ட துணைத் தலைவர் வாசு தேவன், மண்டல் பொதுச்செயலா ளர் தர்மராஜன், பிரபாகர், கோபால், செல்வம், காட்டு ராஜா,பாலா, மேலாண்மை மாவட்ட துணைத் தலைவர் சிவகுரு ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஸ்ரீவளநாட்டு முத்தையா சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா!
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம், பாலமேடு அருகே 66.எம்.
உசிலம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வளநாட்டு முத்தையா சுவாமி, சின்னம்மாள் சுவாமி, சின்ன கருப்புசாமி, ஆண்டிசுவாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
மூன்று நாட்கள் நடந்த இந்த யாகசாலை பூஜையில், மங்கள இசை முழங்க விநாயகர் வழிபாடு, வாஸ்து சாந்தி, பூர்வாங்க பூஜை, கணபதி ஹோமம்,
கிராம தெய்வங்களுக்கு கனிவைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து, மூன்று காலை யாக பூஜையுடன் கடம் புறப்பாடாகி கோவிலை சுற்றி வளம் வந்து பின் கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
பின்னர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, கோவில் பூசாரி ஆண்டிச்சாமி மற்றும் முத்தையா சுவாமி கோவில் பங்காளிகள் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.