மதுரை மாவட்டம், சோழவந்தான் பகுதிகளில் உள்ள கோவில்களில் கந்த சஷ்டி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. சோழவந்தான் வைகை ஆற்றங்கரையில் கரையில் அமைந்துள்ள பிரளயநாத சிவன் ஆலயத்தில், கந்த சஷ்டியை முன்னிட்டு, இத்திருக்கோவில் அமைந்துள்ள பாலமுருகனுக்கு, பக்தர்களால் சிறப்பு அபிஷே வழிபாடுகள் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, விநாயகர் மற்றும் பாலமுருகன் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு அர்ச்சனை வழிபாடுகள் நடைபெற்றது. இதில், பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி இளமதி, தொழில் அதிபர் எம் .வி. எம் .மணி கவுன்சிலர்கள் வள்ளி மயில், எம். மருதுபாண்டியன், கணக்கர் சி பூபதி மற்றும் ஆலயப் பணியாளர்கள் செய்திருந்தனர்.
இதே போல, சோழவந்தான் அருகே உள்ள தென்கரை மூலநாதர் சுவாமி ஆலயத்தில், கந்த சஷ்டியை முன்னிட்டு, முருகனுக்கு சிறப்பு பூஜைகள் அர்ச்சனைகள் நடைபெற்றது. பக்தர்களுக்கு கோயில் விழா கமிட்டியின் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
மதுரை அண்ணா நகர் தாசில்தார் நகர் அருள்மிகு சௌபாக்கிய விநாயகர் ஆலயத்தில், கந்த சஷ்டி முன்னிட்டு, பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷே அர்ச்சனைகள் நடைபெற்றது. தாசில்தார் நகர் சித்தி விநாயகர் ஆலயத்திலும், வர சித்தி விநாயகர் ஆலயத்திலும், கோமதிபுரம் ஜூபிலி டவுன் ஞான சித்தி விநாயகர் ஆலயத்திலும், அண்ணாநகர் வைகை காலனி வைகை விநாயகர் ஆலயத்திலும், மதுரை அண்ணாநகர் யானைக் குழாய் முத்து மாரியம்மன் ஆலயம், மதுரை அண்ணாநகர் பூங்கா முருகன் ஆலயத்திலும் முருகனுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.