முருகப் பெருமானை முழு மனத்துடன் தியானித்துக் கொண்டே, இந்தத் துதியை பக்தியுடன் சொல்லுங்கள். தடைகள் விலகி உங்கள் வாழ்வில் சிறப்புகள் பலவும் வந்து சேரும்.
அங்கந்யாச கரந்யாச:
அஸ்ய ஸ்ரீசுப்ரமண்ய கவச ஸ்தோத்ர மஹா மந்த்ரஸ்ய
ப்ரஹ்மா ருஷி: அனுஷ்டுப் சந்த:
ஸ்ரீசுப்ரமண்யோ தேவதா
ஓம் நமோ இதி பீஜம், பகவத் இதி சக்தி:
சுப்ரமண்யேதி கீலகம்
ஸ்ரீசுப்ரமண்ய ப்ரசாத சித்யர்த்தே ஜபே விநியோக:
சாம் இத்யாதி ஷடங்கன்யாஸ
ஸ்ரீ சுப்ரமண்ய கவசம்
ஸிந்தூராருணம் இந்து காந்தி வதனம் கேயூரஹாராதிபி:
திவ்யைர் ஆபரணைர் விபூஷித தனும் ஸ்வர்காதி ஸௌக்யப்ரதம் |
அம்போஜபய சக்தி குக்குடதரம் ரக்தாங்க ராகோத்ஜ்வலம்
ஸுப்ரமண்ய முபாஸ்மஹே ப்ரணமதாம் பீதி ப்ரணாசோத்பவம் ||
சிந்தூரம் போல சிவந்த நிறமுள்ளவரும், சந்திரன் போல் அழகான முகமுள்ளவரும், தோள் வளை, முத்தாரம் முதலிய திவ்யமான ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட உடலழகு உள்ளவரும், சொர்க்க போகத்தை அளிக்கக் கூடியவரும், தாமரைப்பூ, சக்திவேல், சேவல் ஆகியவற்றைத் தாங்கி அபயக் கரம் நீட்டுபவரும், சிவந்த வாசனைப் பொடிகளால் பிரகாசிக்கின்றவரும், அடியார்களின் பயத்தைப் போக்குவதிலேயே கருத்துள்ளவருமான ஸ்ரீசுப்ரமண்யரை வணங்குகின்றோம்.
ஸுப்ரஹ்மண்யோ க்ரத: பாது ஸேனாநீ: பாதுப்ருஷ்டத:|
குஹோ மாம் தக்ஷிணே பாத வஹ்னிஜ: பாது வாமத:||
முன் பக்கம் ஸ்ரீ சுப்ரமண்யர் காக்கட்டும். தேவ சேனாபதியானவர் பின்பக்கம் காக்கட்டும். தென் பாகத்தில் குஹன் காக்கட்டும். இடது பாகத்தில் அக்னி பூ: (அக்கினியிலிருந்து தோன்றியவன்) என்கிற முருகன் துணை நிற்கட்டும்.
சிர: பாது மஹா ஸேன: ஸ்கந்தோ ரக்ஷேல்ல லாடகம் |
நேத்ரே மே த்வாத சாதச்ச ச்ரோத்ரே ரக்ஷத விச்வ ப்ரீத் ||
பெரும் சேனையை உடையவர் தலையைக் காக்கட்டும். ஸ்கந்தன் நெற்றியைப் பாதுகாக்கட்டும். பன்னிரண்டு கண்களை உடையவர் எனது கண்களை ரட்சிக்கட்டும். உலகத்தை வகிக்கின்றவர் என் காதுகளை ரட்சிக்கட்டும்.
முகம் மே ஷண்முக: பாத நாசிகாம் சங்கராத்மஜ: |
ஓஷ்டௌ வல்லிபதி: பாது ஜிஹ்வாம் பாதஷாடானன: ||
ஆறுமுகன் எனது முகத்தைக் காக்கட்டும். மூக்கை சிவமைந்தன் காக்கட்டும். உதடுகளை வள்ளி மணாளன் காக்கட்டும். நாவை ஆறுமுகங்களை உடையவன் காக்கட்டும்!
தேவசேனாபதிர் தந்தான் சிபுகம் பாஹித்வாத ச பாஹுச:|
கண்டம் தாரகா ஜித் பாஹு பாஹு த்வாதச பாஹுச ||
தேவசேனாவின் கணவன் பற்களைக் காக்கட்டும். பன்னிரு கையன் முகவாய்க் கட்டையைக் காக்கட்டும். தாருகனை ஜயித்தவர் எனது கழுத்தை ரட்சிக்கட்டும். பன்னிரண்டு கைகளை உடையவர் எனது கைகளைக் காக்கட்டும்!
ஹஸ்தௌ சக்திதர: பாது வக்ஷ: பாதுச்ரோத பவ:
ஹ்ருதயம் வஹ்னிபூ: பாது குதாம் பாது அம்பிகாஸுத ||
வேலாயுதத்தைத் தரித்தவர் எனது உள்ளங் கைகளைக் காக்கட்டும். நாணற்காட்டில் உண்டானவர் எனது மார்பைக் காக்கட்டும். அக்னியிலிருந்து உண்டானவர் எனது இருதயத்தைக் காக்கட்டும். அம்பிகை பாலன் எனது வயிற்றைக் காக்கட்டும்!
நாபிம் சம்புஸுத: பாது கடிம் பாது ஹராத்மஜ |
ஊருபாது: கஜாரூடோ ஜாநு மே ஜான்ஹவீ ஸுதா ||
சம்புகுமாரன் எனது தொப்புளைக் காக்கட்டும். சிவ புத்ரன் எனது இடுப்பைக் காக்கட்டும். யானையின் மீது அமர்ந்திருப்பவர் எனது தொடைகளைக் காக்கட்டும். கங்காசுதனான காங்கேயன் எனது முழங்கால்களைக் காக்கட்டும்.
ஜங்கே விசாகோ மே பாது பாதௌ மே சிகி வாஹன: |
ஸர்வாண் அங்கானி பூதேச ஸர்வதாதும் ச பாவகி ||
விசாகன் எனது கணுக்கால்களைக் காக்கட்டும். மயில்வாகனன் எனது கால்களைக் காக்கட்டும். எல்லா பூதகணங்களுக்கும் தலைவர் எனது எல்லா அவயவங்களையும் காக்கட்டும். அக்னி குமாரன் எனது உடலிலுள்ள எல்லா தாதுக்களையும் காக்கட்டும்!
ஸந்த்யா காலே நிசீதின்யாம் திவா ப்ராதர் ஜலேக்னிஷு
துர்கமே ச மஹாரண்யே ராஜத்வாரே மஹாபயே
துமுபே ரணமத்யே ச சர்வ துஷ்டம் ருகாதிஷு
கோராதிஸாத்வஸே அபேத்யே ஜ்வராதிவ்யாதி பீடனே
துஷ்ட க்ரஹாதி பீதௌ ச துர்நிமித்தானி பீஷணே
அஸ்த்ர சஸ்த்ர நிபாதே ச பாதுமாம் க்ரௌஞ்சரந்த்ர க்ருத்||
சந்தியா காலத்திலும், நடு இரவிலும், பகலிலும், காலையிலும், நீரின் மத்தியிலும், நெருப்பிலும், பயங்கரக் காட்டிலும், அரண்மனை வாயிலிலும், கோரமான போரின் மத்தியிலும் கொடூரமான மிருகங்களின் நடுவிலும், திருட்டு பயத்திலும், தடுக்க முடியாத ஜுரம் முதலிய நோய்களின் பாதிப்பிலும், தீய கிரகங்களின் தோஷங்களினால் பாதிக்கப்படும்போதும் கெட்ட சகுனங்கள் தோன்றிடும் சமயத்திலும், அஸ்திரங்கள், சஸ்திரங்கள் இவை விழும் பொழுதும் கிரௌஞ்ச மலையை தூள்தூளாக்கிய ஸ்ரீ சுப்ரமண்யர் என்னைக் காக்க வேண்டும்.
ய:ஸுப்ரமண்ய கவசம் இஷ்டஸித்திப்ரதம் படேத்|
தஸ்ய தாபத்ரயம் நாஸ்தி ஸத்யம் ஸத்யம் வதாம்யஹம்||
இஷ்ட சித்தியை அளிக்கவல்ல இந்த ஸ்ரீசுப்ரமண்ய கவசத்தை எவன் படிக்கிறானோ அவனுக்கு மூன்று வித தாபங்கள் கிடையாது. இது உண்மை. உண்மை. சத்தியம் உரைப்போம்!
தர்மார்த்திலபதே தர்மம் அர்த்தார்த்தி ச அர்த்த மாப்னுயாத்|
காமாத்திலபதே காமம் மோக்ஷார்த்தி மோக்ஷ மாப்னுயாத்||
தர்மத்தை விரும்புபவன் தர்மத்தையும், பொருளை விரும்புபவன் பொருளையும், நியாயமான பொருளுக்கு ஆசைப்படுபவன் விரும்பும் பொருளையும் மோட்சத்தை விரும்புபவன் மோட்சத்தையும் அடைவான்.
யத்ரயத்ர ஜபேத் பக்த்யா தத்ர ஸன்னிஹிதோகுஹ:
பூஜா ப்ரதிஷ்டா காலே ச ஜப காலே படேதிதம்||
எங்கெங்கெல்லாம் இந்த சுப்ரமண்ய கவசம் படிக்கப்படுகிறதோ, அங்கங்கெல்லாம் முருகன் அருகிருந்து கேட்டு அருளுவான். பூஜை காலத்திலும் ஜபம் செய்யும்போதும் இந்தத் துதியினைப் படிப்பதால் பூஜையின் பலன் பன் மடங்கு அதிகரிக்கும். மஹா பாவங்கள் விலகும்.
ய: படேத் ச்ருணுயாத் பக்த்யா நித்யம் தேவஸ்ய ஸன்னிதெளெ:|
ஸர்வான் காமான் இஹப்ராப்ய ஸோந்தே ஸகந்தபுரம் வ்ரஜேத்||
இதை கந்தவேளின் சந்நிதியில் எவன் படிக்கிறானோ, எவன் கேட்கிறானோ அவன் இவ்வுலகில் எல்லா விருப்பங்களையும் அடைந்து முடிவில் கயிலையில் உள்ள ஸ்ரீஸ்கந்தபுரத்தை அடைவான்.