பொதிகை ரயில் நேர மாற்றம்; விருதுநகர் மாவட்ட மக்கள் அதிருப்தி!

railway news - 2026
#image_title

சென்னை -செங்கோட்டை பொதிகை அதிவேக ரயில் நேரம் மாற்றத்தால் விருதுநகர் மாவட்ட பயணிகள் அதிருப்தியில் உள்ளனர்

சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் ரயில்களின் நேரம் வரும் ஜனவரி 1 முதல் மாற்றப்படுகிறது . புதிய அட்டவணையில் ரயில்கள் இயக்கப்படுகின்றன.இதில் விருதுநகர் தென்காசி மாவட்ட மக்களுக்கு பெரிதும் பலன் தரக்கூடிய சென்னை- செங்கோட்டை பொதிகை அதிவிரைவு ரயில் மீண்டும் அதிகாலை 3.30க்கு விருதுநகர் மாவட்டத்தில் நுழைவது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே சென்னை கொல்லம் விரைவு ரயில் நள்ளிரவில் விருதுநகர் மாவட்டத்திற்கு ஒரு மணிக்கு வருவதால் ராஜபாளையத்தில் அதிகாலை 2மணிக்கு வருவதால் இந்த ரயிலால் வயதான பயணிகள் பெண்களுக்கு இதர பயணிகளுக்கு பயனில்லை என பொதிகையில் முன்பதிவு செய்து வரும் பயணிகளுக்கு தற்போது பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

இந்த ரயில் மாற்றம் ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நள்ளிரவு நேரத்தில் பொதிகை ரயில் விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர் சிவகாசி ராஜபாளையம் பகுதிக்கு வந்ததால் அப்போதைய சிவகாசி எம்பி ரவிச்சந்திரன் இந்த ரயிலின் நேரத்தை பெரும் போராடி மாற்றி காலையில் வருமாறு மாற்றியமைக்க பட்டது.

தற்போது இந்த ரயில் மீண்டும் ராஜபாளையத்திற்கு அதிகாலை நான்கு முப்பதுக்கு வருவதால் பயணிகள் பெரும் கவலையில் உள்ளனர்.

பொதிகை ரயில் நேரம் ஜனவரி 1 முதல் மாறுகிறது. அது அதிகாலை 4 மணிக்கு முன்பே வருகிறது. சிவகாசி மற்றும் விருதுநகர் மாவட்ட மக்களுக்கு இது உகந்த நேரம் அல்ல, ஏனெனில் முன்கூட்டியே புறப்பட வேண்டியுள்ளது மற்றும் சங்கடமான நேரத்தில் ரயிலில் இருந்து இறங்க வேண்டியுள்ளது. ஆட்டோ கட்டணங்களும் அதிகமாக உள்ளன.

தற்போது சிலம்பு ரயிலின் நேரம் விருதுநகர் மாவட்ட மக்களுக்கு மிகவும் வசதியாக உள்ளது, ஆனால் அது எல்லா நாட்களிலும் இயக்கப்படுவதில்லை. விருதுநகர் மாவட்டம் நான்காவது பணக்கார மாவட்டம் மற்றும் மத்திய, மாநில அரசுகளுக்கு அதிக வருவாயை ஈட்டித் தருகிறது,

மேலும் இது ஒரு வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கப்படும் மாவட்டமாகவும் உள்ளது. ஆனால் மத்திய அரசு மற்றும் ரயில்வே துறை விருதுநகர் மக்களை கோமாளிகளாக நினைக்கிறது.

இந்த அவல் நிலை நீங்க விருதுநகர் மாவட்டத்திற்கு ஒரு தனி ரயில் மட்டுமே நிரந்தரத் தீர்வாகும். ராஜபாளையம் மதுரை சென்னை இடையே தினசரி சென்று வரக்கூடிய ஒரு ரயில் ஆண்டாள் பெயரில் இயக்க பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

பொதிகை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் நேரம் வரும் ஜனவரி 1 முதல் மாற்றப்படுகிறது. இனி புதிய நேரத்தில் புத்தாண்டில் ஓடும்.

இப்போது உள்ள நேரம் டிசம்பர் 31 வரை மட்டுமே தொடரும் கீழே கொடுக்க உள்ள நேரத்தில் தான் வரும் ஜனவரி 1 முதல் பொதிகை எக்ஸ்பிரஸ் சென்னையிலிருந்து செங்கோட்டை நோக்கி இயங்கவுள்ளது.

12661 || பொதிகை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்: சென்னை எழும்பூர் -> செங்கோட்டை
அதிவிரைவு சேவை – தினசரி – 22 பெட்டிகள் கொண்ட வண்டி.

ஜன.1 முதல் மாற்றப்படும் நேரம்

07:35 PM : சென்னை எழும்பூர் (புறப்பாடு)
08:02 PM : தாம்பரம்
08:30 PM : செங்கல்பட்டு
10:20 PM : விழுப்புரம்
11:04 PM : விருதாச்சலம்
01:10 AM : திருச்சிராப்பள்ளி
02:10 AM : திண்டுக்கல்
03:10 AM : மதுரை
03:40 AM : விருதுநகர்
03:55 AM : திருத்தாங்கல்
04:05 AM : சிவகாசி
04:25 AM : ஸ்ரீவில்லிபுத்தூர்
04:40 AM : ராஜபாளையம்
05:10 AM : சங்கரன்கோவில்
05:25 AM : பாம்பு கோவில் சந்தை
05:40 AM : கடையநல்லூர்
06:00 AM : தென்காசி
06:40 AM : செங்கோட்டை (வருகை)

சென்னை எழும்பூரில் இருந்து டிசம்பர் 31 வரை இரவு 08:10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 07:25 மணிக்கு சென்று வரும் செங்கோட்டை பொதிகை சூப்பர் பாஸ்ட் இனி மேலே குறிப்பிடப்பட்டுள்ள புதிய நேரத்தில் இயங்கவுள்ளது! இது ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மேலும் ஜனவரி 1முதல் சென்னை எழும்பூர் முதல் பல ரயில் கள் புதிய நேரத்தில் இயங்கும் 12631 | சென்னை திருநெல்வேலி நெல்லை எக்ஸ்பிரஸ்
இரவு 08:40 மணிக்கு பதில் இரவு 08:50

22675 || சென்னை திருச்சி சோழன் SF எக்ஸ்பிரஸ்
காலை 07:45 மணிக்கு பதில் காலை 08:00

16127 || சென்னை குருவாயூர் எக்ஸ்பிரஸ்
காலை 10:20 மணிக்கு பதில் காலை 10:40

12661 || சென்னை செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ்
இரவு 08:10 மணிக்கு பதில் இரவு 07:35

16751 || சென்னை ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ்
இரவு 07:15 மணிக்கு பதில் இரவு 08:35

12693 || சென்னை தூத்துக்குடி முத்துநகர் எக்ஸ்பிரஸ்
இரவு 07:30 மணிக்கு பதில் இரவு 07:15

12635 || சென்னை எழும்பூர் மதுரை வைகை எக்ஸ்பிரஸ்*
மதியம் 01:45 மணிக்கு பதில் மதியம் 01:15

20665 || திருநெல்வேலி வந்தே பாரத்*
பிற்பகல் 02:45 மணிக்கு பதில் மாலை 03:05

22661 || சென்னை இராமேஸ்வரம் சேது எக்ஸ்பிரஸ்
மாலை 05:45 மணிக்கு பதில் மாலை 05:55

இவ்வாறு முதற்கட்டமாக மாற்றியமைக்கப்பட்ட புதிய அட்டவணை NTES செயலியில் அப்டேட் ஆகி உள்ளது . விரைவில் அனைத்து ரயில்கள் தொடர்பான தகவல்களும் அப்டேட் ஆகிவிடும் !

மாற்றியமைக்கப்பட்ட புதிய அட்டவணையை NTES செயலியில் TRAIN SCHEDULE என்ற ஆப்ஷனை கிளிக் செய்து ரயில் என்னை பதிவு செய்து தேதியை ஜனவரி ஒன்றாம் தேதிக்கு பிறகு மாற்றினால் புதிய கால அட்டவணை காண்பிக்கும்.

ஏராளமான ரயில்களுக்கு நேரங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது ! வருடாந்திர கால அட்டவணை மாற்றம் வரும் ஜனவரி 1 தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories