டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

madurai school silambam in tumbler - 2026

மதுரையில் பள்ளி மாணவர்கள் உலக சாதனை; டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த 107 மழலையர் பள்ளி மாணவர்கள்!

மதுரையில் உள்ள தனியார் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி மாணவர்கள், தங்களின் அபார ஒருநிலைப்படுத்தும் திறமையை வெளிப்படுத்தும் வகையில் ஒரே நேரத்தில் நான்கு உலக சாதனைகளை படைத்து அசத்தியுள்ளனர்.
கிங்டம் வேர்ல்ட் ரெக்கார்ட் (Kingdom World Record) அமைப்பின் நேரடி கண்காணிப்பில் இந்த சாதனை முயற்சி நடைபெற்றது.

மதுரையிலேயே, முதல் முறையாக ஒரே இடத்தில் நான்கு விதமான சாதனைகள் நிகழ்த்தப்பட்டதாக சாதனை அமைப்பின் பிரதிநிதி செல்வராஜ் தெரிவித்தார்.
107 மாணவர்கள் ஒரு சிறிய டம்ளர் மீது ஏறி நின்று, ஒரு மணி நேரம் தொடர்ந்து சிலம்பம் சுற்றி வியக்க வைத்தனர்.

எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி பயிலும் 3 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அரை மணி நேரம் தொடர்ந்து புஜங்காசன நிலையில் நின்று சாதனை படைத்தனர். மாணவர்கள் கர்ணபீடாசன நிலையில் இருந்துகொண்டே அரை மணி நேரம் சிலம்பம் சுற்றி தங்களின் பன்முகத் திறமையை நிரூபித்தனர்.

இது குறித்து பள்ளி தாளாளர் பேசுகையில்: குழந்தைகளின் மனதை ஒருநிலைப்படுத்துவதற்காகவும், அவர்களின் தனித்திறமையை வெளிக்கொணரவும் கடந்த 45 நாட்களாக தினமும் ஒரு மணி நேரம் தீவிர பயிற்சி அளிக்கப்பட்டது. பெற்றோர்களின் பெரும் ஆதரவும், ஆசிரியர்களின் அர்ப்பணிப்புமே இந்த வெற்றிக்குக் காரணம்,” என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.

பயிற்சியாளர் ரமேஷ் மாஸ்டர் மாணவர்களை யோகா மற்றும் சிலம்பம் ஆகிய இரண்டிலும் பக்குவமாகத் தயார்படுத்தியதை கிங்டம் வேர்ல்ட் ரெக்கார்ட் அமைப்பு வெகுவாகப் பாராட்டியது.

ஏற்கனவே, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ‘நோபல் ரெக்கார்ட்’ செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

Entertainment News

Popular Categories