பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

corruption charges in palamedu municipal office - 2026

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

மதுரை பாலமேடு பேரூராட்சியில் 3.50 லஞ்சத்தை பெற்றுக் கொண்டு வாரச்சந்தை ஏலத்தில் கலந்து கொள்ள விடாமல், காவல்துறையினரை வைத்து தடுத்து மிரட்டுவதாக பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் தலைவர் துணைத் தலைவர் மீது ஒப்பந்ததாரர் குற்றச்சாட்டுகள் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை, மாவட்டம், பாலமேடு முதல்நிலை பேரூராட்சியில் வாரம் தோறும் சனிக்கிழமை நடைபெறும் வாரச்சந்தைக்கு பணம் வசூலிக்க வருடத்திற்கு ஒரு முறை ஏலம் விடப்பட்டு ஒப்பந்ததாரர் மூலம் கடைகளுக்கான வாடகை வசூலிக்கப்படுவது வழக்கம்.

இந்த நிலையில், கடந்த ஆண்டு இந்த வார சந்தைக்கான ஏலம் பாலமேட்டை சேர்ந்த குணசேகரன் (47) என்பவர் 21 லட்சத்து 66 ஆயிரத்து 35 ரூபாய்க்கு ஏலம் எடுத்ததுடன், கடையை கடந்த 11 மாதமாக நடத்தி வந்துள்ளார்.

மேலும் வாரச்சந்தை நடைபெறும் கடைகளை சாலையில் போட எதிர்ப்பு தெரிவித்ததால் ஒப்பந்ததாரர் குணசேகரன் சாலையில் வாரச்சந்தை கடை போட அனுமதிக்க வேண்டும், மின் விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும், சந்தைக்கு வரும் வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் கழிப்பறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பேரூராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டார்.

ஆனால் , பேரூராட்சி நிர்வாகமோ . அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர இயலாது என்றும், சந்தைக்கு மறு ஏலம் விடப்படும் என அறிவிப்பு வெளியிட்டிருந்தது இதனைத் தொடர்ந்து வாரச்சந்தை. ஏலம் எடுப்பதற்கு பலர் பாலமேடு பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்திருந்த நிலையில் திடீரென பழைய ஒப்பந்த தாரர் குணசேகரன் ஏற்கனவே 21 லட்சத்துக்கு வாரச்சந்தை ஏலம் எடுத்து நஷ்டம் ஏற்பட்டதால் தனக்கே மறுபடியும் வாரச்சந்தையை கொடுக்க வேண்டும் இல்லையென்றால் என்னிடம் லஞ்சப்பணமாக வாங்கிய பேரூராட்சி செயல் அலுவலர், தலைவர், துணை தலைவர் என மூவரும் சேர்ந்து ரூ.3.50 லட்சம் லஞ்சம் வாங்கிய பணத்தை திருப்பி தந்து விட்டு பொது ஏலத்தை நடத்த வேண்டும் என கூட்டத்தில் கலந்து கொண்டு கோரிக்கை வைத்தார்.

ஆனால், அவரை அலுவலக ஏலத்தில் கலந்து கொள்ள விடாமல் வெளியே போகச் சொல்லி போலீசாரை விட்டு வெளியேற்றியதாக தெரிகிறது. இதனால் விரக்தி அடைந்த குணசேகரன் தன்னிடம் பெற்ற 3.50 லட்சம் லஞ்ச பணத்தை திருப்பி தர வேண்டும் இல்லையென்றால் பேரூராட்சி அலுவலகத்தை விட்டு செல்ல மாட்டேன் என தொடர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் .

இதனால், பேரூராட்சியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. மேலும், பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் ஆகியோர் தன்னை காவல்துறையின் மூலம் வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதாகவும் மிரட்டுவதாகவும் குற்றம் சாட்டினார். அதனால் ஏலக்கூட்டம் நடைபெறும் இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செயல் அலுவலருக்கு 50 ஆயிரம், பேரூராட்சி தலைவர், துணை தலைவர் என மொத்தம் 3.50 லட்சம் லஞ்சமாக கொடுத்ததாகவும் ஒப்பந்ததாரர் குணசேகரன் கூறிய நிலையில், இதுகுறித்து, மதுரை மாவட்ட ஆட்சியர் நேரடியாக விசாரணை செய்து பாலமேடு பேரூராட்சி செயல் அலுவலர் தலைவர் துணைத் தலைவர் ஆகியோர் லஞ்சப்பனம் பெற்றது உண்மையாக உண்மையாகும் பட்சத்தில் செயல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் தலைவர் துணைத் தலைவர் மீது பதவி நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், இதுபோல், பேரூராட்சியில் நடைபெறும் மற்ற பணிகளிலும் முறைகேடுகள் நடந்துள்ளதா என விசாரணை நடத்த வேண்டும் என பாலமேடு பேரூராட்சிக்கு பொதுமக்கள் மாவட்ட ஆட்சியருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories