
செங்கோட்டை நீதிமன்றத்தில் கொரனா தடுப்பு விழிப்புணர்வு மற்றும் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
செங்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் வைத்து வட்ட சட்டப்பணிகள் குழு மற்றும் அரசு சித்த மருத்துவத்துறை, வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கொரனா தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் மற்றும் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு வட்ட சட்டப் பணிகள் குழு தலைவரும் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியில் நீதித்துறை நடுவரும் நீதிமன்ற நீதிபதி எம்.பாலாஜி தலைமை தாங்கினார்.
வழக்கறிஞர்கள் சங்க செயலர் கொட்டாகுளம்அருண், பொருளாளர் மூர்த்தி, துணைத்தலைவர் முத்துக்குமாரசாமி ஆகியோர் முன்னிலைவகித்தனர். வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஆ.வெங்கடேசன் அனைவரையும் வரவேற்று பேசினார். தொடர்ந்து மாவட்ட சித்த மருத்துவ அதிகாரி உஷா, உதவி மருத்துவ அலுவலர் சித்தமருத்துவர் கலா, அரசு ஆயர்வேத மருத்துவர் ஹரிஹரன், ஹோமியோபதி மருத்துவர் கிறிஸ்டி, இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவர் மேனகா ஆகியோர் கொரனா நோய் தடுப்பு மற்றும் நோய் தொற்று உள்ளவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும் சித்த, ஆயர்வேத, ஹோமியோபதி மருத்துவத்தின் பயன்பாடுகள் சிகிச்சை முறைகள் குறித்து விளக்கி பேசினர்.
பின்னர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் கபசுர குடிநீர், மற்றும் தடுப்பு மருந்து பொருட்களை நீதிபதி பாலாஜி வழங்கி பேசினார். தொடர்ந்து எளிய முறையிலான யோகப் பயிற்சியினை இயற்கை மருத்துவர் மேனகா அளித்தார்.
நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள் ஆதிபாலசுப்பிரமணியன், மூத்த வழக்கறிஞர் சுப்பிரமணியன், இளங்கோ, நல்லையா, மாரிக்குட்டி, புளியறைவெங்கடேஷ், பழனிக்குமார், சிராஜ், சிதம்பரம், கார்த்திகைராஜன், பாலகிருஷ்ணபாபு நீதிமன்ற தலைமை எழுத்தர் முருகன், உதவியாளர் செண்பகக்குமார், நாசர்சந்திரகலாதேவி, மற்றும் உதவியாளர்கள், பணியாளர்கள், குமஸ்தாக்கள் வண்டிமுத்து, சுப்பிரமணியன், சுந்தர், சமூக ஆர்வலர்கள் நேசமணிஈஸ்வரதாஸ், முத்தரசு பாலகணேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் அரசு குற்றத்துறை வழக்கறிஞர் பரணீந்தர் நன்றி கூறினார்.
இதற்கான ஏற்பாடுகளை வட்டசட்டப்பணிகள் குழு நிர்வாக பணியாளர் ஜெயராமசுப்பிரமணியன் செய்திருந்தார்.