தென்காசி தனியார் மருத்துவமனையில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டும்… ஆக்ஸிஜன் சிலிண்டர் பற்றாக்குறை!

Published:

tenkasi meeran hospital
tenkasi meeran hospital

தென்காசியில் தனியார் மருத்துவமனையில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டும் ஆக்ஸிஜன் சிலிண்டர் பற்றாக்குறை என புகார் எழுந்துள்ளது.

தமிழகத்தில் கொரனோ நோய் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அதிகம் பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் இந்த நிலையில் தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்த ரகுமான் கனி என்பவர் கடந்த 23 ஆம் தேதி அன்று தொற்று உறுதி செய்யப்பட்டு தென்காசி (மீரான்) தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்

இந்த நிலையில் திடீரென நேற்று அவரது உறவினர்களை அழைத்து ஆக்ஸிஜன் பற்றாக்குறை இருப்பதாக கூறி அவரை இங்கிருந்து அழைத்துச் செல்லுமாறு மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது இதனை அடுத்து இதுவரை அவர்கள் 3 லட்சம் வரை மருத்துவமனையில் செலுத்தியுள்ளனர் மேலும் 3 லட்சம் செலுத்தினால்தான் இங்கிருந்து செல்ல முடியும் எனவும் கூறியதாகவும் அவர்களை வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் முதலில் பேசிய தொகை குறைவாக கூறி அட்மிஷன் செய்ததாகவும் பின்னர் இவ்வாறு இவர்கள் தெரிவித்தவுடன் அதனை உறவினர்கள் கேட்க வந்துள்ளனர் இதனை அடுத்து மருத்துவமனை அவர்களை அலட்சியப்படுத்தி கடும் வார்த்தைகளால் விமர்சித்துள்ளதாக கூறபப்டுகிறது இந்த நிலையில் அவர்கள் திடீரென மருத்துவமனை முன்பு ஆக்சிசன் போதிய அளவு இல்லாமல் ஏன் அதிகமான பணம் வாங்கி சிகிச்சைக்கு அனுமதிக்க வேண்டும் என கூறியும் வேண்டுமென்றே பணத்திற்காக மருத்துவமனை நிர்வாகம் இப்படி செய்வதாக கூறி அவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்

இந்த நிலையில் விசாரித்த போது மொத்தமாக ஆக்ஸிஜன் வழஙகும் நிறுவனஙகள் முதலில் அரசு மருத்துவமணைகளுக்கு வழஙகிய பின்னரே தனியார் மருத்துவமணை தேவைகளுக்கு வழஙக அறிவுறுத்தப்பட்டுள்ளதாக நிலை உள்ளதால் தற்போது ஆக்ஸிஜன் பற்றாக்குறை நிலவுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஆனாலும் இன்று இந்த நிலையில் இன்று தமிழ் நாடு தவுஹித் ஜமாத் மாவட்ட தலைவர் ஜலாலுதீம் மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்துள்ளார் அதில் தென்காசியில் கொரோனா சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமணைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை நிலவுவதாகவும் பெரும் பொருளாதாரத்தை செலவிட்டும் திடீரென மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்படுவதாகவும் பொறுப்பற்ற முறையில் பதிலளிப்பதாகவும் கூறி மேலும் இது போன்ற நிலையை மாற்றி தட்டுப்பாட்டை அறவே நீக்குமாறு கோரிக்கை வைத்துள்ளார்

Related articles

Recent articles

spot_img