சென்னை புறநகர் மின்சார ரயில்களில் நாளை முதல் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை!

அடடே... அப்படியா? சென்னை லைஃப் ஸ்டைல்
velachery train
velachery train
  • நாளை முதல் புறநகர் ரயில்களில் பொது மக்கள் பயணிக்க அனுமதி இல்லை.
  • நாளை முதல் 20ஆம் தேதி வரை பொதுமக்களுக்கு மின்சார ரயில்களில் அனுமதி இல்லை.
  • அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டும் அனுமதி.
  • கல்வி நிறுவன ஊழியர்கள், மாணவர்களுக்கு அனுமதி – ரயில்வே நிர்வாகம்.

சென்னை புறநகர் மின்சார ரயில்களில் நாளை மே 6ம் தேதி காலை 4 மணி முதல், மே 20ம் தேதி வரை பொதுமக்கள் பயணம் செய்ய அனுமதி மறுக்கப் பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ரயில்களில் 50 சதவீத பயணிகள் மட்டுமே பயணிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவின்படி நாளை முதல் சென்னை புறநகர் ரயில்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. மத்திய, மாநில அரசுகளின் அத்தியாவசிய பணிகளில் இருப்பவர்கள் தங்களது அடையாள அட்டையை காண்பித்து பயணிக்கலாம் என்று தெற்கு ரயில்வே அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே தற்போது, பீக் அவர்ஸ் எனப் படும் கூட்ட நெரிசல் மிகுந்த நேரங்களில் ஆண் பயணிகள் பயணிக்க தடை இருந்து வருகிறது. இந்த நிலையில், ஒட்டுமொத்தமாக அரசின் அத்தியாவசியப் பணியில் இருப்பவர்கள் தவிர மற்றவர்கள் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

இது குறித்த விரிவான தகவல்களுக்கு இந்த ட்வீட்டைப் பார்க்கவும்…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.