1012308 chennai 16 2 - 2026

திருநெல்வேலி – திருச்செந்தூர் புதிய மின்மய ரயில் பாதையில் இன்று ஆய்வு : பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

நெல்லை

திருநெல்வேலி – திருச்செந்தூர் அகல ரயில் பாதையில் மின்மயமாக்கல் பணிகள் நிறைவடைந்துவிட்டன. இந்த புதிய மின்மய ரயில் பாதையை திங்கட்கிழமை (19.12.2022) அன்று தெற்கு ரயில்வே தலைமை முதன்மை மின் பொறியாளர் ஏ. கே.சித்தார்த்தா ஆய்வு செய்ய இருக்கிறார்.

இந்த ஆய்வு சிறப்பு ரயில் மூலம் காலை 08‌.30 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து துவங்க இருக்கிறது. முதலில் பாளையங்கோட்டையில் உபமின் நிலையம், செய்துங்கநல்லூர் அருகே உள்ள ரயில்வே மேம்பாலம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆற்றுப்பாலம், நாசரேத்தில் உள்ள உபமின் நிலையம், ஆறுமுகநேரி அருகே உள்ள ரயில்வே கேட் மற்றும் வழியில் குறுக்கிடும் தமிழ்நாடு மின்சார வாரிய மின் தடம் ஆகியவற்றை ஆய்வு செய்கிறார்.

மேலும் வழியில் உள்ள ரயில் நிலையங்களிலும் ஆய்வு செய்து திருச்செந்தூருக்கு மதியம் 01.35 மணிக்கு ஆய்வு ரயில் சென்று சேரும்படி திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. பின்பு திருச்செந்தூரிலிருந்து திருநெல்வேலி வரை ஆய்வு ரயிலை மின்சார எஞ்சின் மூலம் இயக்க ரயில் மின் பாதையில் 25 ஆயிரம் வோல்ட் மின்சாரம் பாய்ச்சப்படும். எனவே பொதுமக்கள் பயணிகள் பேராபத்தை விளைவிக்கும் 25 ஆயிரம் வோல்ட் மின்சாரம் பாயும் ரயில் மின் தடத்தை நெருங்கவோ, தொடவோ வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறார்கள்.

இது சம்பந்தமான எச்சரிக்கை விளம்பர பலகைகள் ரயில் நிலையங்களில் பயணிகள் பார்வையில் படும்படி வைக்கப்பட்டுள்ளது. ‌ மின்சார எஞ்சின் பொருத்திய ஆய்வு ரயில் திருச்செந்தூரிலிருந்து மாலை 03.20 மணிக்கு புறப்படும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. தலைமை முதன்மை மின் பொறியாளர் ஆய் வறிக்கைக்கு பிறகு இந்த பகுதியில் ரயில்கள் மின்சார என்ஜின் மூலம் இயக்கப்படும். இந்த ஆய்வில் கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் தண்ணீரு ரமேஷ் பாபு மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

1012308 chennai 16 2 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.