
உலகக்கோப்பை கால்பந்து – FIFA 2022 பரபரப்பான ஆட்டத்தில் கோப்பை வென்றது நட்சத்திர வீரர் மெஸ்ஸி தலைமையிலான, அர்ஜென்டினா.
நடப்பு சாம்பியன் பிரான்ஸ் அணியை தோற்கடித்து ரூ. 344 கோடி பரிசையும் தட்டிச் சென்றது.. உலகக்கோப்பை கால்பந்து இறுதி போட்டியில் வென்ற அர்ஜென்டினா அணிக்கு ரூ.342 கோடி பரிசு வழங்கப்படுகிறது.
22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அரபு நாடான கத்தாரில் கடந்த மாதம் 20-ந்தேதி கோலாகலமாக தொடங்கியது. லீக், நாக்-அவுட் முடிவில் நடப்பு சாம்பியன் பிரான்சும், முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினாவும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.
பெனால்டி ஷூட் அவுட் முறையில் முடிவு: கத்தார் கால்பந்து உலகக் கோப்பை இறுதிப் போட்டி: 90 நிமிடங்கள் முடிவடைந்த நிலையில், பிரான்ஸ் – அர்ஜெண்டினா அணிகள் 2-2 என சமனில் இருந்ததால் கூடுதலாக 30 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டது. அதில் இரு அணிகளும் தலா 1 கோல் அடித்ததால் இரு அணிகளுக்கும் தலா 5 பெனால்டி ஷூட் அவுட் வழங்கப்பட்டது.
அர்ஜெண்டைனா மற்றும் பிரான்ஸ் ஆகிய இரு அணிகளும் கூடுதல் நேரத்தில் கூட தலா மூன்று கோல்கள் அடித்து சமநிலை பெற்றதால் பெனால்டி சூட் வாய்ப்பு வழங்கப்பட்டது . அதன்படி என்ற அர்ஜென்டைனா 4 – 2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று உலகக் கோப்பையை கைப்பற்றியது .
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் பேராவலுடன் உற்றுநோக்கிய உலகக் கோப்பை கால்பந்து இறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா வென்றது.
மெஸ்சியின் கடைசி உலகக் கோப்பை போட்டி இது என்பதால் தனது நீண்ட கால ஏக்கத்தை தணிக்கும் வகையில் கோப்பையை கையில் ஏந்தி அர்ஜென்டினா ரசிகர்களுக்கு ஆனந்தத்தை அள்ளிக் கொடுத்தார்.
வெற்றி வாகை சூடிய அர்ஜென்டினா அணிக்கு ரூ.342 கோடி பரிசுத்தொகை கிடைத்தது.