மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை..

images 2023 01 25T135402.131 - 2026

குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது திருநெல்வேலி வனத்துறை மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடைவிதித்தது .மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்த கனமழை காரணமாக மணிமுத்தாறு அருவியில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தென்காசி மாவட்டம் முழுவதும் நேற்றும் பரவலாக மழை பெய்தது.

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக திடீரென பரவலாக மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. நெல்லை மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக சேரன்மகாதேவி, களக்காடு, மூலக்கரைப்பட்டி, அம்பை, நாங்குநேரி, ராதாபுரம் உள்ளிட்ட இடங்களில் விட்டுவிட்டு சாரல் மழை பெய்தது. அதிகபட்சமாக அம்பை, ராதாபுரத்தில் தலா 15 மில்லிமீட்டரும், நாங்குநேரியில் 10 மில்லிமீட்டரும் மழை பெய்தது. அணை பகுதிகளை பொறுத்தவரை பாபநாசம் அணை பகுதியில் 17 மில்லிமீட்டர் மழை பெய்தது. சேர்வலாறில் 6 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. மாநகர பகுதியில் பெய்த பரவலான மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி கிடந்தது. பெரும்பாலான சாலைகள் சேறும் சகதியுமாக காட்சியளித்தது.

இந்நிலையில் இன்று காலை முதல் வெயில் அடிக்க ஆரம்பித்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை சீரானது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்த கனமழை காரணமாக மணிமுத்தாறு அருவியில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகளுக்கு அங்கு அனுமதி வழங்கப்படவில்லை. இன்றும் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால், 2-வது நாளாக தடை விதிக்கப்பட்டு உள்ளது. தென்காசி மாவட்டம் முழுவதும் நேற்றும் பரவலாக மழை பெய்தது. இதனால் குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, புலியருவி உள்ளிட்ட அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையும் படியுங்கள்: ஈரோடு கோர்ட்டில் போலி ஆவணங்கள் கொடுத்த வாலிபர் கைது இதனால் மெயின் அருவியில் மட்டும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி குளிக்க போலீசார் தடை விதித்தனர்.

1826409 courtallam - 2026
குற்றாலத்தில் குளிக்க அனுமதி

நேற்று மாலையில் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு குறைந்து தண்ணீர் சீராக கொட்ட தொடங்கியது. இதனால் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் மெயின் அருவியில் ஓரமாக நின்று குளித்து மகிழ்ந்தனர். மாவட்டத்தில் அதிகபட்சமாக கடனா அணை பகுதியில் 20 மில்லிமீட்டரும், ராமநதியில் 17 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. சங்கரன்கோவில், சிவகிரி, தென்காசி, செங்கோட்டை, ஆய்குடி உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

Topics

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

Entertainment News

Popular Categories