
காளகஸ்தி கோவிலில் தவறவிட்ட ரூ.1.50 லட்சம் ரொக்க பணத்தை உரியவரிடம் திரும்ப கொடுத்தவருக்கு செங்கோட்டையில் பாராட்டு.
காளகஸ்தி கோவிலில் தவறவிட்ட பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த புளியங்குடியை சேர்ந்த மாரிமுத்துவை தமிழ்நாடு நுகர்வோர் உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு மாநில செயலாளர் மணிமகேஷ்வரன் மற்றும் செங்கோட்டை அரசு மருத்துமனை தலைமை மருத்துவர் ராஜேஷ்கண்ண்ன நேரில் அழைத்து பாராட்டு சான்று வழங்கி மரியாதை செலுத்தினர்.
திருப்பதியை அடுத்துள்ள காளகஸ்தி திருக்கோவிலுக்கு புளியங்குடியை சேர்ந்த மாரிமுத்து தனது குடும்பத்துடன் வழிபட சென்றார். அப்போது ரோட்டில் கிடந்த ஒன்றரை லட்சம் ரூபாய் ரொக்க பணம், பாஸ்வேர்டுடன் கூடிய ஏடிஎம் கார்டு, ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் மற்றும் 27 நபர்கள் பயணம் செய்யக்கூடிய ஆன்லைன் டிக்கட் இருந்துள்ளது.
இந்நிலையில் மத்தியபிரதேசத்தை சேர்ந்த ராஜேஸ் என்பவர் தொலைந்துபோன தனது போனில் தொடர்பு கொண்டுள்ளார். அதனை எடுத்து பேசிய புளிங்குடியை சேர்ந்த மாரிமுத்து என்பவர், தங்களுடைய போன், மற்றும் ரொக்க பணம் தன்னிடம் பத்திரமாக இருப்பதாகவும், தாங்கள் எங்கிருப்பதாக தெரிவித்தால் நான் நேரில் வந்து தருகிறேன் என கூறி, ஆட்டோ மூலம் அவர்கள் இருந்த பகுதிக்குச் சென்று அவர்களுடைய பணம், செல்போன், ஆன்லைன் டிக்கட் ஆகியவற்றை ஒப்படைதுள்ளார்.
இவரின் நேர்மையான செயலால் நெகிழந்துபோன மத்தியபிரதேசத்தை சார்ந்த குடும்பத்தினர் நன்றி தெரிவித்த்தோடு அவர்களுடைய பயணத்தையும் மகிழ்ச்சியுடன் சென்றனர்.
இந்நிலையில், மாரிமுத்துவின் நேர்மையான செயலை பாராட்டும் வகையில் தமிழ்நாடு நுகர்வோர் உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் சுப்புராம் ஆலோசனையின்படி, மாநில செயலாளர் மணிமகேஷ்வரன், மாரிமுத்துவை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பாளர் ராமு, தென்காசி நகர தலைவர் மாரியப்பன், நகர பொறுப்பாளர் குருவாயுர் கண்ணன், திருமால், சித்தர் மறுமலர்ச்சி தலைவர் வக்கீல் முத்துமாரியப்பன், சிவக்குமார், அவைத்தலைவர் துரைராமச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.
இதேபோல், செங்கோட்டை அரசு மருத்துமனை தலைமை மருத்துவர் ராஜேஷ்கண்ணன், மற்றும் திருநெல்வேலி அரசு மருத்துவர் பாஸ்கர் கனகராஜ் ஆகியோர், மாரிமுத்துவின் நேர்மையை பாராட்டும் வகையில் நேரில் அழைத்து பொன்னாடை அணிவித்து, பாராட்டு சான்று வழங்கி சிறப்பித்தனர்.