
விஜயதசமி அன்று தொடங்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் நூற்றாண்டுவிழாவை முன்னிட்டு, அக்.12 ஞாயிறு மாலை, செங்கோட்டை பூத்திரம் தெரு நாகம்மன் கோவில் அருகில் வைத்து ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் நுாற்றாண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பணிநிறைவு பெற்ற சிஆர்பிஎப் கண்காணிப்பாளா் நடராஜன் தலைமை தாங்கினார். எஸ்கே.சங்கரன் முன்னிலை வகித்தார். கன்னியாகுமரி கோட்ட பொறுப்பாளா் சிவா பஞ்ச பரிவர்த்தனை குறித்து விளக்கினார்.
அதில் குடும்ப நலன், சமுதாய நலன் மற்றும் கட்டமைப்பு, சுற்றுச்சூழல் இயற்கை வளம், ஆறு, குளம், ஏரி பாதுகாத்தல், குடிமக்கள் கடமை, சுதேசிய பொருட்கள் பயன்பாடு மற்றும் ஆதரவு அளித்தல் குறித்து சிறப்புரையாற்றினார்.
விழாவில் ஏராளமான ஆர்.எஸ்.எஸ்., உறுப்பினா்கள் சீருடை அணிந்து கலந்து கொண்டனா். விழா ஏற்பாடுகளை செங்கோட்டை நகரச் செயலாளா் அயோத்தி முருகேசன் சிறப்பாக செய்திருந்தார்.





