
செங்கோட்டையில் அக்.12 ஞாயிறு அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், தாயின் மடியில் அறக்கட்டளை சார்பில் 6ஆம் ஆண்டு தீபாவளி புத்தாடைகள் எம்எல்ஏ., கிருஷ்ணமுரளி(எ)குட்டியப்பா வழங்கினார்.
செங்கோட்டை தாயின் மடியில் சமூகநல அறக்கட்டளை சார்பில் கொரோனா பெருந்தொற்று காலம் தொட்டு ஏழை, எளிய ஆதரவற்ற முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்கள் இருப்பிடம் தேடி உணவு வழங்கி சேவை செய்தும் ஆண்டுதோறும் ஏழை,எளிய ஆதரவற்ற முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இலவச வேஷ்டி, சேலை வழங்கி வருகிறது.
6ஆம் ஆண்டு தீபாவளி புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு செங்கோட்டை ஸ்ரீஜெயேந்தரா மெட்ரிக் பள்ளி நிர்வாகி ராணி ராம்மோகன் தலைமை தாங்கினார். பிஎல்எம் ஸ்போர்ட்ஸ் அகடாமி நிர்வாகி பிரபாமுரளி முன்னிலை வகித்தார். குற்றாலம் பராசக்தி வித்யாலயா ஆசிரியை ராஜகுமாரி சக்திவேல் அனைவரையும் வரவேற்று பேசினார்.
திருக்குற்றாலம் ஐந்தருவி ஸ்ரீசுவாமி விவேகானந்தா ஆஸ்ரம ஸ்தாபகர் ஸ்ரீமத் சுவாமி அகிலானந்த மஹராஜ், ஸ்ரீசாரதா ஆஸ்ரமம் ஸ்ரீஆத்மப்ரியா மாதாஜி ஆகியோர் ஆசியுரை வழங்கினா்.
நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கடையநல்லுார் சட்டமன்ற உறுப்பினா் கிருஷ்ணமுரளி (எ)குட்டியப்பா கலந்து கொண்டு பயனாளிகளுக்கு புத்தாடைகள் வழங்கி வாழ்த்தி பேசினார்.
நிகழ்ச்சியில் பாஜக மத்திய அரசு நலத்திட்டங்கள் பிரிவு மாநில செயலாளா் மருதுபாண்டியன், விஜிசி. மாநில பொதுச்செயலாளா் குமரேசன், பசிபோக்கும் தென்பொதிகை அறக்கட்டளை தலைமை ஒருங்கிணைப்பாளா் மாரியப்பன், பெரியபிள்ளைவலசை பஞ்சாயத்து தலைவா் வேல்சாமி, கட்டளைகுடியிருப்பு பஞ்சாயத்து தலைவா் முத்துப்பாண்டி, பணிநிறைவு பெற்ற வேளாண் துணை அலுவலா் ஷேக்முகைதீன், சீனியா் ஹோம் நிர்வாக இயக்குனர் டாக்டர் சுகன்யா, வழக்கறிஞா் கணேசபாண்டியன், முருகன், சங்கர்ரவி ஸ்தபதியார், ஹரிஹரகிருஷ்ண்ணயர், பாஜக மாவட்ட செயற்குழு உறுப்பினா் சிங்கப்பூர்தங்கம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
முடிவில் தாயின் மடியில் சமூகநல அறக்கட்டளை நிறுவனா் கோமதிநாயகம் நன்றி கூறினார்.
முன்னதாக செங்கோட்டை நகராட்சி , புதுார் பேரூராட்சி, பெரியபிள்ளைவலசை, கற்குடி உள்ளிட்ட பகுதிகளில் பணிபுரியம் துாய்மை பணியாளா்கள் அனைவருக்கும் மதிய உணவும், இலவச வேஷ்டி சேலையும் வழங்கப்பட்டது.





